அத்தியாயம் 26.
பூர்வி கொஞ்சம் தூரம் சென்றிருப்பாள், அவளின் மொபைலில் ராகுலிடம் இருந்து அழைப்பு வந்தது. எப்போதும் பூர்வி யாருடைய அழைப்பையும் ஏற்க தயங்கியது இல்லை. எந்த பிரச்சனையாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்பது அவளுடைய எண்ணம்.
எனினும் இப்போது ராகுலிடம் பேச அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை. எனவே அழைப்பை எடுக்காமலே விட்டாள்.
தொடர்ந்து இரண்டுத் தடவை அழைத்த ராகுல், அதற்கு மேல் அழைக்கவில்லை!
Tagged under