Rohini Sri

Rohini Sri


TEN CONTEST 2019 - 20 - Entry # 22

Story Name - Naan avalil paripooranam

Author Name - Sri

Debut writer - No


நான் அவளில் பரிபூரணம் - ஸ்ரீ

வாசகர்களுக்கு வணக்கம்,

சில்சீக்கு நான் புதுமுகம் அல்ல.எனினும் சக வாசகர்களுக்கான என்னுடைய அறிமுகத்திற்காகவே இந்த முன்னோட்டம்.

2016 இல் சில்சியில் தொடங்கிய என்னுடைய எழுத்துப் பயணம் கடவுளின் அருளால் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. போட்டிக்கான எனது படைப்பான "நான் அவளில் பரிபூரணம்",என்னுடைய பதினெட்டாவது கதை. கொரானா,ஊரடங்கு என நிலைமையே தலைகீழாய் மாறிவிட்டிருக்கும் நிலையில் என்னால் இதை முடிக்க முடியுமா என்ற தயக்கம் அதிகமாகவே இருந்தது.

எனினும் இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ போட்டிகளில் பங்கு கொண்டு,இப்போது தாய் வீட்டின் நிகழ்ச்சியில் என்னுடைய பங்கு இல்லாமல் இருப்பதை மனம் ஏற்க மறுத்த ஒரே காரணத்தினால் கடைசி நிமிடத்தில் முடித்து அனுப்பியிருக்கிறேன்.

கதையைப் பற்றிக் கூற வேண்டும் எனில்,பொதுவாய் போட்டி என்றவுடன் சமூக நெறிக் கதைகளோ அல்லது எதாவது வித்தியாசனமான கதைக் களத்தையோ எடுத்து எழுதுவது தான் வழக்கம்.இருந்தும் இந்த முறை காதலை மையமாகக் கொண்டே எழுதியிருக்கிறேன்.

எப்போதுமே சமூகத்தின் மாற்றம் என்பது குடும்பத்தில் இருந்தும்,உறவுகளில் இருந்தும் மட்டுமே ஏற்பட முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படியான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இக்கதை.

இந்த வாய்ப்பினை அளித்த சில்சி குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியங்களுடன்,
ஸ்ரீ.

காதல் கள்வனே

வாசகர்களுக்கு வணக்கம்.காதல் கள்வனே கிராமத்து பின்னனியில் அமைந்த குடும்ப கதை.திருநெல்வேலி தமிழில் என்னுடைய முதல் முயற்சி.கதையை படிக்கும் வாசகர்களுக்கு தமிழ் பாடல்களையும் அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் குறுந்தொகை பாடல்களை விளக்கவுரையோடு அளித்திருக்கிறேன்.