Chillzee KiMo T-E-N Contest Winner - Rasu
வணக்கம்.
எழுதுபவர்களை ஊக்குவிப்பதில் சில்சீக்கு நிகர் சில்சீதான் என்பதை மீண்டும் இந்த TEN Contest மூலம் நிரூபித்திருக்கிறது சில்சீ.
கடந்த 2015-ல் சிறுகதை போட்டியின் மூலம்தான் நான் ஒரு எழுத்தாளராக சில்சீயில் அறிமுகமானேன். அன்றிலிருந்து சில்சீயின் ஊக்கத்தாலும், வாசக சகோதர, சகோதரிகளின் அன்பாலும் இன்றுவரை நான் ஒரு எழுத்தாளராக சில்சீயில் வலம் வந்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால் நல்ல தளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்றுதான் கூறுவேன். இப்போது நீங்களும் நான் சொல்வதை உணர்ந்திருப்பீர்கள். தொடர்கதைகள் எழுதுவதற்கு ஊக்கத்தொகை கொடுப்பதோடல்லாமல், அந்த தொடர்கதைகளை சில்சீ கீமோ மூலம் முழு நாவலாக பதிவிட்டு அதன் மூலமும் மாதா மாதம் நம்முடைய கதையை வாசிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஊக்கத்தொகையினை வழங்கி தன்னுடைய வளர்ச்சியில் நம்மையும் இணைத்துக் கொள்கிறது சில்சீ. எந்த பிரச்சினை என்றாலும் தயங்காமல் தங்களை அணுகலாம் என்று வழிவகையும் செய்து கொடுத்திருக்கிறது.
வாசிப்பதை நேசிப்பவர்களுக்கும் எந்த குறையையும் சில்சீ வைக்கவில்லை. தொடர்கதைகள், சில்சீ கீமோ மூலம் குறைந்த கட்டணத்தில் முழு நாவல்கள் வாசிக்கும் வாய்ப்பு, சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவை துணுக்குகள், சமையல் குறிப்புகள், இன்னும் பிற பொதுவான தகவகல்கள் என பல்துறை அம்சங்களை வழங்கி வருகிறது சில்சீ.
TEN Contest-ல் பங்கேற்றதையே நான் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கையில் எனக்கு மூன்றாவது பரிசு என்ற அறிவிப்பு வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வார்த்தைகளே இல்லை.
இந்த நேரத்தில் சில்சீக்கும், நாவல் போட்டிக்கு நடுவர்களாக இருந்து என்னுடைய கதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கும், பரிசுத்தொகை வழங்கிய நிர்வாகத்தினருக்கும், என்னுடைய கதையைத் தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துகள் மூலம் என்னை ஊக்கப்படுத்தி இப்போது பரிசு பெறுமளவிற்கு என்னுடைய எழுத்தை மெருகேற்றிய அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
நன்றி…. நன்றி…… நன்றி!!!
என்றும் அன்புடன்
ராசு. (இரா.சுபா)