Chillzee KiMo T-E-N Contest Winner - Archana Nithyanantham
எழுத்து, வாசிப்பு இரண்டுமே முடிவிலி பயணங்கள்.
மண்வாசனை, மனிதர்கள், அவர்களின் விசித்திர மனங்கள், சிரிப்பு, சோகம், மறந்தவை, மரித்தவை, என அனைத்தையும் காகிதங்களின் வழியே வாசகனுக்குக் கடத்தும் பேராற்றல் எழுத்தாளனுக்கு உண்டு.
ஒவ்வொரு எழுத்தாளனுக்குள் ஒரு பிரபஞ்சம் ஒளிந்துகொண்டு இருக்கிறது. அந்தப் பிரபஞ்சத்தைப் பேனா முனையின் வழியே கசியச் செய்யும் முயற்சிக்கு ஏதுவாய் ஒரு மேடை தேவைப்படுகிறது.
அத்தகையதொரு தளத்தினை அமைத்துக்கொடுத்து, பல பேனாக்களுக்கு சிறகு முளைக்கக் காரணமாக இருக்கும் Chillzee KiMo குழுவினருக்கு, எனது நன்றிகளும்! வாழ்த்துகளும்!!