Chillzee KiMo T-E-N Contest Winner - Padmini Selvaraj
எழுத்துலகில் அடி எடுத்து வைக்க நினைக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் Chillzee ஒரு வரப்பிரசாதம் ஆகும்... உங்கள் எழுத்து திறமையை வெளிக்கொண்டு வர, அதை எளிமையாக அரங்கேற்ற, நல்லதொரு மேடையை அமைத்து கொடுத்திருக்கிறது Chillzee.
எழுத வேண்டும் என்று பெரிதாக திட்டம் இல்லாமல் சும்மா எழுதி பார்க்கலாமே என்று என்னை போன்ற எத்தனையோ பேர்களை ஊக்குவிக்கிறது இந்த தளம்.. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு இன்னும் நிறைய எழுத்தாளர்கள் உருவாகவேண்டும்..
உங்கள் மனதில் தோன்றும் கற்பனைகளை கவிதைகளாகவோ, சிறுகதைகளாகவோ, இல்லை தொடர்கதைகளாகவோ எழுதுங்க.. எழுதுவதும் நல்ல ஒரு ஸ்ட்ரெஸ் பர்ஸ்டர் என்று என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்..
அதனால் நமக்கு எழுத வருமா வராதா என்றெல்லாம் யோசிக்காமல் சும்மா களத்தில் இறங்குங்கள்...நம்ம Chillzee வாசகர்களே உங்களை நல்ல எழுத்தாளர்களாக மாற்றி விடுவார்கள்.. .. All the best to everyone. Thank you Chillzee and KiMo for your continuous support for bringing up more authors !! Keep it up and keep rocking!!
– அன்புடன் பத்மினி செல்வராஜ்