Chillzee KiMo T-E-N Contest Winner - Vijayakumaran

அன்பு நண்பர்களுக்கு 

வணக்கம். என் குருநாதர் எழுத்து சித்தர் பாலகுமாரனின் ஆசியோடு எழுதத் துவங்கிய எனக்கு என் முதல் நாவலாகிய "நின் திருவடி சரணம்"க்கு chillzee kimo மின் இதழ் நடத்திய Sujith நினைவு போட்டியில் சிறப்பு பரிசு கிடைத்தது பெருமகிழ்ச்சியையும்  புதிய உற்சாகத்தையும் அளிக்கிறது. 

 

Chillzee மின் இதழ் உண்மையிலேயே மிகப்பெரிய ஒரு காரியத்தை மிக சுலபமாக செய்து முடித்துள்ளது. 2 மாதத்திற்குள் போட்டியில் பங்குகொண்ட அனைத்து நாவல்களையும் படித்து மதிப்பீடு செய்து முடிவு அறிவித்து பிரம்மாண்டமான பரிசுத்தொகையை வழங்குவது என்பது சாதாரண காரியமல்ல இதை செய்து முடித்த நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

என்னைப்போன்ற புதிய எழுத்தாளர்களை அடையாளம் காண்பிக்கும் உங்களின் பணி இடைவிடாது சிறப்பாக நடந்தேற இறைவனை வேண்டுகிறேன்.

 

போட்டியில் இடம்பெற்றிருந்த அனைத்து கதைகளுமே சிறப்பானவை தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் அமைந்திருந்தது மிக சுவாரசியமான திருப்பங்களைக் கொண்ட கதைகளும் இருந்தன. அவைகளை படிக்கும்போது பிரபல எழுத்தாளர்களான சிவசங்கரி, அனுராதா ரமணன் போன்றவர்கள் கூட இந்த போட்டியில் கலந்து கொண்டார்களோ என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு கதையின் நகர்வுகளை அனைவருமே சுவாரசியமாக அமைத்திருந்தனர்.அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

 

வாசக நண்பர்களுக்கு ஒரு வார்த்தை. நிறைய படிக்கும்போது ஏதாவது எழுதலாமே என்று தோன்றும் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை வெளிப்படுத்த இந்த தளம் உங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். Chillzee யில் நிறைய படியுங்கள் தயக்கமில்லாமல் எழுதுங்கள். உங்களுக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 

 சக எழுத்தாள நண்பர்களாலும் ஆர்வமிக்க வாசகர்களாலும் என் குருவருளாலும் என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள முனைகின்றேன்.

என் கதைகளிலோ கதை சொல்லும் விதத்திலோ ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனே விமர்சித்து என்னை கூர்மைப் படுத்திக் கொள்ள உதவுமாறு  தங்களை அன்புடன் வேண்டுகிறேன். வேறொரு நாவலுடன் மீண்டும் நாம் சந்திப்போம்.

 

 நன்றி,

 

 என்றென்றும் அன்புடன், 

விஜயகுமாரன்.