ஒரு சிறு கதை.
தூண்டுகோல்.
”என் கண்ணு, என் தங்கம் என் ராசால்ல ஒரு வாய் சாப்பிடுய்யா இந்தா ஆஆஆ வாய் திறப்பா” என அம்பிகா தனது 25 வயது மகனுக்கு சாப்பிட வைக்க போராடிக் கொண்டிருக்க அசோக்கோ கையில் வைத்திருந்த செல்போனில் மும்முரமாக விளையாடிக் கொண்டே,
”அம்மா போங்கம்மா, எப்ப பாரு என்னை தொல்லை செய்துக்கிட்டே இருக்கீங்க, உங்களால நான் 2 முறை தோத்துப் போயிட்டேன் இந்த முறையாவது நான் ஜெயிக்கனும் போம்மா” என எரிந்து விழுந்தான் ஆனாலும் அவனது பேச்சால் கோபம் கொள்ளாமல் பாசத்துடன் அவனது தலைமுடியை வருடிய அம்பிகாவோ,
”இப்படி சாப்பிடாம இருந்தா விளையாட்டுல கவனம் இருக்காதுப்பா, ஒரு வாய் சாப்பிடு அப்புறம் பாரு நீதான் விளையாட்டில ஜெயிப்ப” என சொல்ல அதைக் கேட்டு சற்று மனம் மாறிய அசோக்கும் வாயை நன்றாக திறந்து,
”ஆஆஆ” என சொல்ல அம்பிகாவிற்கோ ஏதோ கஷ்டமான விளையாட்டில் விளையாடி ஜெயித்து கோப்பையை வாங்கிய அளவிற்கு மகிழ்வுடன் அசோக்கிற்கு ஒரு வாய் சாப்பாடு ஊட்டிவிட்டு மென்மையாகச் சிரித்தார். அசோக்கும் உணவை அசைப்போட்டபடியே விளையாட்டில் ஆர்வமானான்.,