அத்தியாயம் 6.
நள்ளிரவு கடந்திருந்தது. பூர்வி தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுக் கொண்டே இருந்தாள். அந்த கடிதம் அவள் உறக்கத்தை முற்றிலுமாக கெடுத்திருந்தது.
திவேஷை பற்றியே கவலைப் பட்டுக் கொண்டிருந்ததில் வேறு எதையோ கவனிக்க தவறி விட்டாளா? யார் இந்த முகம் தெரியாத அயோக்கியன்?
அந்த கடிதத்தின் வரிகளை நினைத்தாலே அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அதை அனுப்பியது யாராக இருக்கும்?
யார் என்று அவளால் உடனே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
காதல், காமம் இரண்டுமே திவேஷுடன் அவளுக்கு கசந்துப் போயிருந்தது.
Tagged under