அத்தியாயம் 5.
“ஜம்ப், ஜம்ப், ஜம்ப்!” நிரவி சத்தமாக ஊக்க குரல் கொடுக்க, ஈஷான் மெதுவாக குதித்தான்.
“ஸீ, இட்ஸ் ஈஸி பீஸி லெமன்ஸ் ஸ்க்வீஸீ!” நிரவி சொல்ல இஷான் கிளுக்கிச் சிரித்தான்.
பிள்ளைகளின் விளையாட்டை ரசித்துக் கொண்டே தான் பிறந்து வளர்ந்த வீட்டை சுத்தப் படுத்திக் கொண்டிருந்தாள் பூர்வி.
அந்த வீட்டினுள் நுழைந்த கணம் முதலே பூர்விக்குள் இனம் புரியாத உணர்வலைகள் ஏற்பட்டிருந்தது. அப்பாவை பூர்விக்கு அதிகமாக நினைவு இல்லை. ஐந்து வயது முதலே அவளுக்கு தெரிந்தது எல்லாமே அம்மா அம்மா அம்மா மட்டுமே. இந்த வீட்டில் எத்தனை எத்தனையோ நினைவுகள் கொட்டிக் கிடக்கிறது.
Tagged under