அத்தியாயம் 4.
பிள்ளைகளைக் கண்ணில் காணாத உடன் பூர்வியின் இதயம் பல ஆயிர மடங்கு வேகத்தில் துடித்தது. எங்கே போயிருப்பார்கள் எனும் கேள்விக்கு அவள் விடைத் தேட தொடங்கும் நேரத்தில் மழலைகளின் சிரிப்பு சத்தம் கட்டிடத்தின் பின்னால் இருந்துக் கேட்டது.
பூர்வி சிரிப்பு சத்தம் கேட்ட பக்கம் ஓடினாள்.
அங்கே இஷான், நிரவி இருவரும் வேறு ஒருவனுடன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் விளையாட்டிற்கு ஈடுக் கொடுப்பதாக அந்த மனிதன் வேகமாக அவர்களின் விளையாட்டிற்கான ஆங்கில கமண்டரி சொல்லிக் கொண்டிருந்தான்.
இதனால் தான் பிள்ளைகளுக்கு அவள் அழைத்த சத்தம் கேட்கவில்லை. ஒரே வினாடியில் பூர்வியின் டென்ஷன் இறங்கிப் போனது.
Tagged under