Chillzee KiMo Books - மோனாலிஸா புன்னகை - பிந்து வினோத் : Monalisa punnakai - Bindu Vinod

மோனாலிஸா புன்னகை - பிந்து வினோத் : Monalisa punnakai - Bindu Vinod
 

#திருமண வாழ்க்கை!!!!!

 


மோனாலிஸா புன்னகை.

  

கடிகாரத்தைப் பார்த்த படி சமையலறை வேலைகளை அவசர அவசரமாக செய்துக் கொண்டிருந்தாள் அவள்.

  

காலை உணவு தயார் செய்து முடித்து விட்டு, மதிய உணவையும் செய்தவள், அதை கணவனுக்கு ஒரு டிஃபன் பாக்ஸிலும், மகளுக்கு ஒரு டிஃபன் பாக்ஸிலும் அடைத்து வைத்தாள். பின் தூங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பினாள்.

  

“மணி ஏழு தானே ஆகுது? ஏழே கால் மாதிரி அவளை எழுப்பு..” என்ற கணவனை நேராக பார்க்காமல்,

  

“இன்னைக்கு... அந்த மீட்டிங்... ம்ம்ம்... ரைட்டர்ஸ் ஃபங்க்ஷன் இருக்கு...” என்றாள்.

  

சொல்லும் போதே வரப் போகும் சூடான வார்த்தைகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டே தான் சொன்னாள்.

  

அவளை ஏமாற்றாமல் அவளை எரித்து விடுவதுப் போல பார்த்தப் படி,