அத்தியாயம் 3.
பூர்வி வேகமாக நடந்து வந்தாள். பிள்ளைகளை ஸ்கூலில் விட்டு வர தாமதமாகி விட்டது. அவள் போகும் 7.45 பஸ் ஏற்கனவே போயிருக்குமோ என்று கவலையாக இருந்தது. பூர்வி நடந்துக் கொண்டிருந்த அப்பார்ட்மென்ட் நடைப்பாதை ஓரமாக நின்றிருந்த இளைஞன் ஒருவன் பூர்வியை பார்த்துக் கொண்டே கன்னடத்தில் என்னவோ சொன்னான்.
அவன் பேசியது பூர்விக்கு புரியவில்லை. இருந்தால் கூட அவன் வாயிலிருந்து வெளி வந்த புகையும், கண்களில் தெரிந்த கள்ளத்தனமும் பூர்வியை விலகி நடக்க வைத்தது.
பூர்வி அவனை கடந்து நடக்கத் தொடங்கவும், தமிழில் விரசமாக அதே இளைஞன் கமன்ட் அடித்தான்.
Tagged under