அத்தியாயம் 2.
“மூவி நல்லா இருந்துது. நல்ல காமெடி.” பூர்வி டீமில் இருந்த மற்றவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
பூர்வி அதைக் கவனிக்காததாக காட்டிக் கொண்டு வேலையில் ஈடுப்பட்டிருந்தாள். அவர்களின் டீம் லீட் சில்வியா மீட்டிங்கிற்கு சென்றிருந்தாள். கேள்வி கேட்க ஆள் பக்கத்தில் இல்லை என்ற தைரியத்தில் அந்த இளைஞர்களும், இளைஞிகளும் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
பூர்விக்கு அவர்கள் யாருடனும் பேச விருப்பம் இருக்கவில்லை. அதனால் தன் வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.
அப்போது பூர்விக்கு பக்கத்தில் இருந்த போன் மெதுவாக ஓசை எழுப்பியது. டைப் அடித்துக் கொண்டே ஒரு கையால் ரிசிவரை எடுத்துப் பேசினாள்.
Tagged under