புது நாவல்.
என்னை நீ மறவாதிரு,
”கிராமத்தை பத்தி எத்தனையோ பேர் டாக்குமெண்ட்ரி எடுத்திருக்காங்க, அவங்களே எல்லாத்தையும் சொல்லிட்டாங்க, அதுக்கு மேல என்ன இருக்குன்னு நீ டாக்குமெண்ட்ரி ஃபிலிம் எடுக்க வந்திருக்க எனக்கு ஒண்ணுமே புரியலை ரேவதி” என்றாள் கீதா,
”கீதா கிராமங்களைப் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லியிருக்கலாம், நான் புதுசா ஏதாவது சொல்லப் பார்க்கிறேனே”,
”இது தேவையா உனக்கு, படிச்ச படிப்புக்கு ஏதாவது வேலை செய்வன்னு பார்த்தா டாக்குமெண்ட்ரி படம் எடுக்கறேன்னு சொல்றியே, சரியான முட்டாள் நீ” என ஆதங்கப்பட அதற்கு ரேவதியோ கலகலவென சிரித்துவிட்டு,
”என்னடி உனக்கு பிரச்சனை, நான் டாக்குமெண்ட்ரி எடுக்கறதா இல்லை உன் ஊர்ல எடுக்க வரேன்னு சொன்னதா”,
”ரெண்டும்தான்“,
”கவலையேப்படாத, என்னால உனக்கும் உன் ஊருக்கும் எந்த பிரச்சனையும் வராது ஓகேவா”,
”சரிடி ஆனா எதைதான் நீ டாக்குமெண்ட்ரியா எடுக்கப் போற, அதையாவது சொல்லு”,