Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 01

என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya
 

என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா

ஜனனி ஒரு ரிலேஷன்ஷிப் ஸ்பெஷலிஸ்ட். வருடக்கணக்கில் காத்திருந்த ஸ்பான்சர்ஷிப்பும், எதிர்பார்க்காத காதலும் அவளுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அதை பற்றி சந்தோஷப் படாத விதத்தில் ஒரு தம்பதியினரின் பிரிவு அவளை அலைக்கழிக்கிறது. ஜனனி தான் ஒரு ட்ரூ ரிலேஷன்ஷிப் எக்ஸ்பர்ட் என்று நிறுபித்துக் காட்ட முடியுமா?

  


 

1.

  

புகழ் பெற்ற எப்.எம் ரேடியோ ஸ்கை ஸ்டேஷனில் லைவ் ஏர் ப்ரோக்ராம் ரெகார்டிங் நடந்துக் கொண்டிருந்தது.

  

“வணக்கம் சென்னை. நான் உங்கள் ஆர்.ஜே விஷ்வா. இன்றைய நம் நிகழ்ச்சியில் என்னோட ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் இருக்காங்க. இவங்களை ரிலேஷன்ஷிப் ஸ்பெஷலிஸ்ட்ன்னும் சொல்லலாம். டிப்ரஷன், விரக்தி, காதல், கல்யாணம் இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் சரி செய்யும் மந்திரம் தெரிஞ்சவங்க. வணக்கம் ஜனனி. குட் மார்னிங்.”

  

“குட் மார்னிங் விஷ்வா, அண்ட் ஆல் ரேடியோ ஸ்கை லிசனர்ஸ்.” என்றாள் ஜனனி. விஷ்வா நீட்டி முழக்கி அறிமுகம் செய்தது இவளை தான். அவனின் அறிமுகத்திற்கு மாறாக ஜனனி மிகவும் சிம்பிளாக இருந்தாள். பார்த்த உடனே மனதில் பதியும் எளிய முக தோற்றம். அவள் அணிந்திருந்த கைத்தறி சேலை அவளுக்கு மரியாதையை சேர்த்தது. முகத்தில் இருந்த புன்னகை மட்டும் சிறிது செயற்கையாக, போலியாக இருந்தது.

  

“உங்க ரிலேஷன்ஷிப் ப்ளாக் (blog) ரிலேஷன்ஷிப் கேட்டகரில இந்த வருடத்திற்கான சிறந்த ப்ளாக் அந்தஸ்தை பெற்று இருக்கு. உங்க யூ-ட்யூப் சேனல் பாபுலர் லிஸ்ட்ல டாப் ஹன்ட்ரட்ல வந்திருக்கு. இது மிகப் பெரிய அச்சீவ்மென்ட். வாழ்த்துக்கள்.”

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya