நடன மங்கையின் மறுபக்கம் - சசிரேகா
ஒரு க்ரைம்நாவல்.
நடன மங்கையின் மறுபக்கம் - சசிரேகா,
உயர்ரக நவீன வசதி படைத்த ஓட்டலில் பெரிய பெரிய விஐபிக்கள், அவர்களின் புதல்வர்கள், பணமுள்ளவர்கள், மாடர்ன் பெண்கள் என அனைவரும் அங்கு நடக்கும் தினசரி பார்ட்டிகளில் கலந்துக் கொள்வதால் அங்கு வருமானம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.
யூத்களின் வரவு அதிகமாக அதிகமாக ஏகப்பட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது அந்த ஓட்டல் நிர்வாகம், ஒரு காலத்தில் சாதாரண மூன் ரெஸ்டாரன்டாக இருந்த அந்த இடம் நாளடைவில் இளைஞர்களின் வரவால் ஓட்டல் அளவில் முன்னேறியது.
மொத்தம் 4 அடுக்குகளால் ஆனது, அடிதளத்தில் கார் பார்க்கிங் முதல் தளத்தில் ரிசப்ஷன் மற்றும் உணவு விடுதிகள் இரண்டாம் தளத்தில் பார்ட்டிகள் முக்கியமான மீட்டிங்குகள் ஏதாவது பங்க்ஷன் நடப்பதற்காக பெரிய ஆடிட்டோரியம் அளவுக்கு ஹால் போல நடுவில் அமைத்து இரு பக்கமும் வராண்டா போல அமைத்திருந்தார்கள்.
அதற்கு மேல் 3வது தளத்தில் வரிசையாக ரூம்கள் பெரிய பெரிய விஐபிக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்தது. 4தளத்திலும் அதே போல அறைகள் தான் என்ன அந்த தளத்தில் மட்டும் சிசி கேமரா கிடையாது, மற்ற எல்லா தளங்களிலும் சிசி கேமரா உண்டு அங்கு மட்டும் இருக்காது, காரணம் அந்த ஓட்டலுக்கென்று சில பிரத்யேகமானவர்கள் தங்குவதற்கும் ஆடல் பாடலுக்காக வரும் நடன மங்கையர்கள் தங்குவதற்கும், சில பல தேவைகளுக்காகவும் அங்கு கேமரா வைக்கவில்லை.
வரிசையாக பல அறைகள் உண்டு நவீன வசதியுடன் கூடியது, ஒவ்வொரு அறையும் ஒரு பிளாட் அளவுக்கு அம்சமாக இருக்கும், அனைத்து பர்னிச்சர் வசதிகளுடன் ஒவ்வொரு அறையும் இருந்தது, அடுத்த தளம் மொட்டை மாடிதான் இருந்தாலும் சில வசதி படைத்த இளைஞர்கள் மொட்டை மாடியையும் விடுவதில்லை.
அதிலும் நண்பர்களுடன் பார்ட்டி அது இது என கும்மாளம் அடிக்க அங்கும் சில வசதிகளை செய்து வைத்திருந்தார்கள் ஓட்டல் நிர்வாகத்தினர். ஆரம்பக் கட்டத்தில் பெருமளவில் பெயர் தெரியாத இந்த ஓட்டல் இன்று எல்லாருக்கும் தெரிந்த வகையில் இருந்தது, காரணம் அங்கு எல்லாமே கிடைக்கும் எல்லாமே என்றால் எல்லாம்தான்.
இரவு மணி 10,
அன்று மாலைக்கும் இரவுக்கும் மதியமான சூழ்நிலையில் மொட்டை மாடியில் பார்ட்டிக்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது, அன்று அங்கு பார்ட்டி வைக்கும் இளைஞன் தன் நண்பர்கள் பட்டாளத்துடன் அங்கு வந்து சேர்ந்தான், அடிக்கடி வருவதால் அவனுக்கு பல டிஸ்கவுண்ட்டுகள் உண்டு, கோடீஸ்வர பையன் என்பதால் பணத்திற்கு பஞ்சம் இன்றி தண்ணீர் போல செலவழித்தான்.
அன்று அவனுக்கு பிறந்த நாள், அதற்க்காக மொட்டை மாடியை சிறிய பப்பு போல மாற்றியமைக்கவும் ஆடலுக்கு துணைக்கு சில பெண்களையும் ஏற்பாடு செய்யச் சொல்லி ஓட்டல் நிர்வாகத்திடம் சொல்லியிருந்தான்.
அவன் பெயர் விஷ்வா. ஓட்டல் நிர்வாகமும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என நடனம் ஆடுவதற்கு மட்டும் சில பெண்களை புக் செய்திருந்தார்கள், அவர்கள் முகத்திற்கு ஒரு அழகான பெண் ஓவியம் போட்ட மாஸ்க் இருக்கும், உண்மையான முகத்தை காட்டாமல் அவர்கள் நளினமாக டேன்ஸ் ஆடுவார்கள், அவர்களின் நடனத்திற்காகவே பார்ட்டிகளை வைப்பது வாடிக்கையாகி விட்டது.