இது ஒரு கற்பனைக் கதை :-)
வினோதமானவனே...
பிரீத்தி தன் அலுவலகத் தோழி மீராவைத் தேடி அவளுடைய க்யூபிற்கு சென்றாள்.
“ஹேய் மீரா, சாரி நான் மார்னிங் மீட்டிங் அட்டென்ட் செய்ய முடியலை. என்ன ஹைலைட்ஸ் பா?”
மீரா பிரீத்தியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கையில் இருந்த மொபைலில் எதையோ படித்தப் படி கையை தூக்கி ‘வெயிட்’ என்று சைகை காட்டினாள்.
“நிறைய வேலை இருக்கு மீரா. அப்படி என்ன படிச்சுட்டு இருக்க?” என்றுக் கேட்டப்படி தோழியின் மொபைலை எட்டிப் பார்த்தாள் பிரீத்தி. மீரா பார்த்துக் கொண்டிருப்பது ஃபேஸ்புக் பக்கம் என்பது தெரிந்தது.
“நான் எவ்வளவு சீரியஸா கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன FB பார்த்துட்டு இருக்க?”
“இது வேற பிரீ. நம்ம ஆபிஸ் கன்ஃபெஷன் பேஜ் (confession page)!” என்றாள் மீரா.
“ஓ!”
“இதைப் படியேன்,” என்று மீரா மொபைலை பிரீத்தியிடம் கொடுத்தாள்.
“அப்படி என்ன??” என்றுக் கேட்டப்படி தோழியின் மொபைலை வாங்கிப் பார்த்தாள் பிரீத்தி.
அந்த கன்ஃபெஷன் பேஜில் யாரோ ஒருவன் எழுதி இருந்த போஸ்ட் அது:
நீங்களும் நானும் ஒரே பில்டிங். நான் தினமும் உங்களைப் பார்ப்பேன். இன்னைக்கும் பார்த்தேன். நம்ம eyes ஒரு செகண்ட் மீட் செய்துச்சு. சீக்கிரமே உங்க கிட்ட பேசுவேன்னு நினைக்கிறேன்.
“இதென்ன நான்சென்ஸ் மீரா. இதை வேற நீ படிச்சுட்டு உட்கார்ந்திருக்க?” கடுப்புடன் சொன்னாள் பிரீத்தி.
“ஒரு நான்சென்ஸும் இல்லை பிரீ. இப்போ எல்லாம் நம்ம காலம் மாதிரி இல்லை. இது புது ஜெனெரேஷன் மக்களோட லவ் ஸ்டைல்!!”
“என்னவோ போ...” என்ற பிரீத்தியின் கண்களில் மீராவின் மொபைல் லாக் ஆனதால் தெரிந்த க்ளாக் கண்ணில் பட்டது.
“ஹேய் இன்னைக்கு டேட் டென்தா???” நம்ப முடியாமல் கேட்டாள் பிரீத்தி.
“ஆமா, இன்னைக்கு டென்த் தான். ஏன்?”
“என் ஹஸ்பன்ட்க்கு நாளைக்கு பர்த் டே ப்பா. அச்சச்சோ மறந்தே போயிட்டேன்! மீரா நான் கிளம்புறேன். நீ அமர் கிட்ட சொல்லிடுறீயா??? நான் நாளைக்கு கேட்ச் அப் செய்றேன்னு சொல்லிடு.”
“பிரீத்தி...” என்று மீரா பதில் சொல்ல தொடங்கியப் போது பிரீத்தி அங்கே இருந்து காணாமல் போயிருந்தாள்.
- Bindu
- Bindu Vinod
- Vinod
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- from_Chillzee
- shortRead
- shortStory
- Family
- Romance
- Tamil
- Drama
- Books