ஒரு சிறுக் கதை :-)
யாதுமாகி...
தினக் காலண்டரில் தேதியைக் கிழித்த ஜோவிதா, அது காட்டிய தேதியை பார்த்தபடி ஒரு சில வினாடிகள் நின்றாள். இன்றைய தேதி இருபத்தி ஐந்து! அப்படி என்றால் அவள் அவளுடைய கணவனுடன் பேசி முழுதாக ஐந்து நாட்கள் ஆகி விட்டன...
அவளையும் அறியாது ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது... வழக்கம் போல் காலை வேலைகளை தொடங்கியவளின் மனம் மட்டும் கணவனை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது...
வெளிநாட்டிலிருக்கும் அவளின் கணவன் அன்புசெல்வனுடன் ஐந்து நாட்களுக்கு முன் போனில் பொரிந்து தள்ளியது நினைவில் இருந்தது...
“..உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு தெரியுது, தாராளமா நீங்க உங்களுக்குப் பிடிச்ச ஒருத்தியை கல்யாணம் செய்துக்கோங்க... லீகலா நாம பிரிஞ்சிடுவோம்...”
அது தான் அவள் சொன்ன இறுதி வாக்கியம். அவள் பேசி முடிக்கும் முன் தொலைபேசி இணைப்பபை அவன் துண்டித்து விட்டான்... அதற்கு பின் மீண்டும் தொடர்புக் கொண்டு பேச அவளுக்கு மனம் வரவில்லை... அவள் சொன்னதும், சொன்ன விதமும் வேண்டுமென்றால் தவறாக இருக்கலாம். ஆனால், அவள் சொல்ல விரும்பியது ஒன்றே ஒன்று தான்... கணவன் மனைவி என்ற உறவை சொல்லிக் கொண்டு, இது போல் அவன் உலகின் ஒரு மூலையிலும், அவள் வேறு ஒரு பக்கத்திலும் பிரிந்து வாழ்வது இனி இயலாதக் காரியம்!
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Bindu Vinod
- Bindu
- Vinod
- from_Chillzee
- shortRead
- shortStory
- Family
- Tamil
- Drama
- Books
- Romance