Chillzee KiMo Books - சமையல்... சமையல்...சமையல்... - பிந்து வினோத் : Samaiyal... Samaiyal... Samaiyal... - Bindu Vinod

 

சமையல்... சமையல்...சமையல்... - பிந்து வினோத் : Samaiyal... Samaiyal... Samaiyal... - Bindu Vinod
 

2012'ல் என் சொந்த அனுபவத்தில் இருந்து எழுதிய semi fan fiction கதை இது :-)

 

 

சமையல்... சமையல்...சமையல்...

  

சாந்தி பல்லைக் கடித்தாள். மனதில் பொங்கி கொண்டிருக்கும் கோபத்தை மற்றவர் அறியாது மறைக்க முகத்தில் தன் வழக்கமான ரெடிமேட் புன்னகையோடு இருந்தாள். தன்னை இங்கே இப்படி தனியே மாட்டி விட்டு விட்டு தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் கணவனை மனதில் திட்டி தீர்த்தாள்.

  

"உங்களுக்கு நிஜமாகவே கடலை பருப்புக்கும் துவரம் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாதா? பாவம்ங்க அரவிந்த்..." என்று ஒரு பத்தாவது முறையாக தன் கணவனுக்காக பரிதாபப்பட்ட கணவனின் நண்பனின் மனைவி வனஜாவை ஒரு பார்வை பார்த்து விட்டு ஈ என இளித்து வைத்தாள். இதே விதமான கேள்வி + பாவம் என்ற பேச்சை தான் கடந்த முக்கால் மணி நேரமாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

  

சாந்திக்கும் அரவிந்திற்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைய போகிறது. அவர்கள் மகள் காவியாவிற்கு 4 வயதாகிறது. சென்னையில் சாந்தியும் அரவிந்தும் கணினி துறையில் பணி புரிந்தனர். சாந்திக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர். கடைசி பெண் என்பதால் வீட்டில் மிகுந்த செல்லம். அரவிந்திற்கு ஒரு இளைய சகோதரன் மட்டும் இருந்தான். மகள் இல்லாத வீட்டில் மருமகளாக சென்றதால் அங்கும் அவளை அனைவரும் மகள் போலவே நடத்தினர். அரவிந்த் மட்டும் அல்லாது மாமனார், மாமியார், அரவிந்தின் தம்பி என அனைவரும் அவள் மீது அன்பு மழை பொழிந்தனர். சாந்தி காலையில் எழுந்து காலை உணவு உண்டு 6.30 மணிக்கு கிளம்பினால் மீண்டும் வீடு திரும்ப இரவு 7.30 ஆகும். அரவிந்தும் கிட்டத்தட்ட அதே போல் தான்... சமையல் மட்டும் அல்லாது காவியாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் அவளுடைய மாமியாரே ஏற்றுக் கொண்டிருந்தார். அவளின் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் வீடும் அருகிலேயே இருந்தது... இப்படி எந்த வித பிரச்சனையும் இல்லாது மகாராணி போல் இருந்தவளின் வாழ்வில், அரவிந்தின் அமெரிக்க பயணத்தின் போது விடுப்பு எடுத்து அவனுடன் அமெரிக்கா செல்வதாக அவள் செய்த ஒரு முடிவு, கலக்கு கலக்கி கொண்டிருந்தது...!

  

அரவிந்த் கணினித் துறையில் மட்டுமல்லாது சமையலிலும் நிபுணன். எந்த விதமான சமையலும் அவனுக்கு அத்துப்படி. சாந்தி அவனுக்கு நேர் எதிர். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது வேதியல் ப்ராக்டிகல் தேர்விற்காக தான் தீக்குச்சி பற்ற வைப்பது எப்படி என்று கற்றுக் கொண்டாள். அவளுக்கு படிப்பிலும், பின் தன் வேலையிலும் இருந்த ஆர்வமும், ஈடுபாடும் சமையலில் இருக்க வில்லை... அதற்கான தேவையும் ஏற்படவில்லை. திருமணமான புதிதில், கணவனுக்கு ஸ்பெஷலாக சமையல் செய்ய வேண்டும் என்று அவளுக்கும் ஆர்வம் இருந்தது. ஆனால் அரவிந்த் சமையலில் நிபுணன் என்பதால் அவனுக்கு பிடித்தவாறு சமைப்பது எளிதாக இருக்க வில்லை.... தாளிப்பதில் ஆரம்பித்து வெங்காயம் வதங்குவது வரை ஒவ்வொன்றுக்கும் தனி இலக்கணம் வைத்திருந்தான் அரவிந்த்.. ஒரு நிமிடத்தில் அறுபது வினாடிகள் எதற்காக என கேள்வி கேட்கும் அளவிற்கு பொறுமைசாலியான சாந்திக்கு இந்த சமையல் இலக்கண இலக்கியங்கள் புரியவில்லை.. சிறிது முயற்சி செய்து விட்டு அதை அத்தோடு விட்டு விட்டாள் சாந்தி.. ஏதேனும் அவசரத்திற்கு சாம்பார், ரசம், சில இனிப்பு வகை என செய்வதோடு சரி...

  

ஆனால் அவளின் சமையல் திறமை இப்படி அரவிந்தின் நண்பர் வட்டம் முழுதும் பிரசித்தி என்பது இன்று இங்கே அரவிந்தின் நண்பன் குமார் வீட்டு பார்ட்டிக்கு வந்த பின் தான் புரிந்தது. அங்கே அவளிடம் பேசிக் கொண்டு இருந்த 3 பெண்களும் அவள் வயதை ஒட்டியவர்கள் தான். தங்களின் சமையல் திறமையை பற்றி பேசியவர்கள், அவளுக்கு இலவச ஆலோசனைகளையும் வழங்கினர். அவர்கள் அனைவரும் திறமைசாலிகளாகவே இருக்கட்டும்... அதே துறையில் சற்றும் தேர்ச்சி இல்லாத ஒருத்தியிடம் தன்னுடைய வீர தீரப் பிரதாபங்களை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அதுவும் மட்டம் தட்டும் தோரணையில்! சுற்றி இருந்த மற்ற சிலரின் முகத்தில் தெரிந்த பரிதாப தோரணைக்கான காரணம் அவளுக்குப் புரிந்தது. எங்கேயும் இருப்பதை போல அங்கேயும் இந்த வம்பர் சபை இருந்தது. இவர்களை பற்றி அவளின் புது தோழி