Chillzee KiMo Books - உண்மை சொன்னால் நேசிப்பாயா? - பிந்து வினோத் : Unmai sonnal necippaya? - Bindu Vinod

 உண்மை சொன்னால் நேசிப்பாயா? - பிந்து வினோத் : Unmai sonnal necippaya? - Bindu Vinod

 

ஒரு ஜாலி லவ் ஸ்டோரி...

 


 

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

  

ம்யுக்தாவை பார்த்த உடன் திவாகரின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

  

எப்படி இவள் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கிறாள்...???

  

மனதினுள் கேள்வியும் ஆர்வமும் ஒன்றாய் தோன்ற அவளையே பார்த்திருந்தான் அவன். சம்யுக்தாவும் அவன் பக்கம் பார்ப்பது போல தான் இருந்தது... ஆனால் பார்க்கவில்லை!

  

அவளும் இதையே தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செய்கிறாள்...

  

திவாகரும் அவன் பங்கிற்கு அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்....!

  

ஹுஹ்!!!!!

  

திவாகர், சம்யுக்தா இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருமே படிப்பில் பயங்கர கெட்டி. ஆனால் திவாகர் பக்கா ‘பழம்’, சம்யுக்தா ரவுடியிலும் பக்கா ‘ரவுடி’.

  

படிப்பு விஷயத்தில் சம்யுக்தாவிற்கு கெடுபிடியாக நேரடிப் போட்டியாக இருந்த திவாகர், விளையாட்டு, கலை போன்ற மற்ற விஷயங்களில் அவளை பார்த்து ரசிக்க மட்டும் செய்வான்.

  

இதற்கு நடுவே எப்போது அவனுக்கு அவள் மீது காதல் ஏற்பட்டது என்று சொல்வது கடினம். எப்போதோ, ஏதோ ஒரு கணத்தில் அந்த மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

  

கல்லூரி முடியும் தருவாயில் இதற்கு மேல் மறைத்து வைத்தால் சரி இல்லை என்று தோன்றவும் சம்யுக்தாவிடம் தயக்கத்துடனே தன் காதலை சொன்னான் திவாகர்...!

  

சம்யுக்தாவின் பதில் தான் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது!

  

அவள் சரி என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை!

  

“இப்போ எப்படி ஒரு டெசிஷன் எடுக்க முடியும், திவா? படிச்சு முடிச்சு கொஞ்சம் செட்டில் ஆகுவோம்... அப்புறம் யோசிச்சு முடிவு செய்வோம்...” என்றாள்.

  

அவள் மறுக்காததற்கு சந்தோஷப்படுவதா, இல்லை சரி என்று ஏற்றுக் கொள்ளாததற்கு வருத்தப் படுவதா என்று புரியாமல் திவாகர் முழிக்க மட்டும் தான் முடிந்தது!

  

படிப்பு முடித்து, அவன் அவனுடைய குடும்ப பிஸ்னஸ் பார்க்க தொடங்க, சம்யுக்தா மேல் படிப்பு படித்து ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்.

  

இரண்டு வருடங்கள் ஓடிச் செல்ல... அந்த வருடம் நடந்த 'ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் டே'வில் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.

  

சம்யுக்தாவின் மேல் படிப்பு, புது வேலை என அனைத்தையும் தெரிந்து வைத்திருந்த திவாகருக்கு அவள் இப்போதாவது தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்வாளா என்ற ஆவல் இருந்தது.!

  

மீண்டும் அவன் அவளிடம் தன் காதலைப் பற்றி பேச்சை எடுக்க,

  

“ப்ச்... என்ன திவா நீங்க... இப்போ தான் நான் வேலையில் சேர்ந்திருக்கேன்.... நீங்களும் உங்க கம்பெனியில் ஓரளவுக்கு செட்டில் ஆகி இருக்கீங்க...