Chillzee KiMo Books - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - சசிரேகா : Anpe ni enna anta rataiyo kotaiyo - Sasirekha

 

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - சசிரேகா : Anpe ni enna anta rataiyo kotaiyo - Sasirekha
 

காதல் சில சமயங்களில் முரண்பட்டவர்களிடமும் தோன்றும் அது போல இங்கு இயற்கைக்கு முரண்பாடான புதிய உறவின் உருவாக்கத்தால் இருவருக்குள் உருவான காதல் அந்த புதிய உறவை ஏற்குமா அல்லது அந்த உறவால் இந்த காதல் காணாமல் போகுமா? என்பதே இக்கதையின் கருவாகும். 

 

 

   

அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - சசிரேகா,

  

முன்னுரை,

  

காதல் சில சமயங்களில் முரண்பட்டவர்களிடமும் தோன்றும் அது போல இங்கு இயற்கைக்கு முரண்பாடான புதிய உறவின் உருவாக்கத்தால் இருவருக்குள் உருவான காதல் அந்த புதிய உறவை ஏற்குமா அல்லது அந்த உறவால் இந்த காதல் காணாமல் போகுமா?  என்பதே இக்கதையின் கருவாகும்.

  

பாகம் 1,

  

சென்னை,

  

பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் அந்த மருத்துவமனையின் டீன் 50 வயதை கடந்த ரமணி பரபரப்பாக இருந்தார், அவரின் முகத்தில் அப்படியொரு பதட்டம் பயம், சாகும் தருவாயில் உயிருக்காக போராடுபவரின் மனநிலைமையில் இருந்தார், அவரிடம் என்றுமே இருக்கும் கனிவான முகம், அமைதியான பார்வை, மென்மையான புன்னகை, இயல்பான நடவடிக்கை இவை அனைத்தும் மாறியிருந்தது, முரண்பட்ட நிலைமையில் காணப்பட்டார்,

  

முகத்தில் ஒரு அச்சம் பார்வையில் பயம், உடல் முழுவதும் வேர்த்து விறுவிறுத்து அந்த வராண்டாவில் வேக வேகமாக நடந்துக் கொண்டிருந்தார், அவர் நேராக சென்றது ஒரு வார்டு அறைக்குள்தான், அங்கிருந்த நர்ஸ் ரதி கூட மிகவும் பதட்டமாக இருந்தாள், ரமணி வரவும் பயத்தில் அவரிடம்,

  

”டாக்டர் என்னை மன்னிச்சிடுங்க” என்றாள் அதைக்கேட்ட ரமணிக்கு அப்படியொரு கோபம் வந்தது.

  

கோபம் என்றால் என்னவென்று தெரியாதவருக்கு இன்று ரதியால் பெரிய தவறு நடக்கவும் அதை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை, இருந்த கோபத்தில் ரதியின் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார். அந்த அடியின் வலியில் ரதி சற்று தடுமாறி தரையில் விழுந்தாள், கண்களில் கண்ணீர், தவறு செய்துவிட்டோம் என்பதால் எதிர்த்து பேசாமல் உடல் நடுங்கி ஒதுங்கி நின்றாள் ரதி.

  

ரமணியின் பார்வை ரதியிடம் இருந்து அப்படியே திரும்பி அங்கிருந்த படுக்கையில் படுத்திருந்த பூங்கோதையின் மீது விழுந்தது, மிகவும் களைப்புடன் மயக்க நிலையில் படுத்திருந்தாள், அவளைக்காண காண ரமணியால் ஏதும் பேச இயலவில்லை, கண்கள் கலங்கினார், எப்பேர்ப்பட்ட தவறு நிகழ்ந்துவிட்டது, அதை சரியாக்க கூட இயலாது, தன்னால் அவளுக்கு நடந்த விபரீதத்தை எண்ணி கலங்கினார்,

  

ரமணி பூங்கோதைக்கு பெரியம்மா உறவாகும், பெரியம்மா என்பவரும் தாய்க்கு சமமானவர்தானே, அப்படியிருக்கையில் ஒரு அம்மா தன் குழந்தைக்கு செய்யக்கூடாத பெரிய தீங்கை செய்துவிட்டார், அது வெளி உலகத்திற்கு தெரிந்தால் என்னாகும் விபரீதம் ஆகும்,

  

பூங்கோதையின் வாழ்க்கையே முடங்கிவிடும், அவளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும், நடந்த தவறுக்கான விடை கூட யாராலும் சொல்ல முடியாது, அப்படியொரு இக்கட்டில் ரமணியே அவளை தள்ளிவிட்டிருந்தார், இத்தனைக்கும் நடந்த அசம்பாவிதம் ஒன்றும் தெரிந்தே நடக்கவில்லை, இதில் யாரையும் குறை கூற இயலாது, அதற்காக நடந்துவிட்ட அசம்பாவிதத்தை சரியாக்கவும் இயலாது, இனி என்ன செய்வது  என தெரியாமல் ரமணி குழம்பிய மனநிலையுடனே பூங்கோதை பக்கம் நடந்துச் சென்று அவளின் நெற்றியில் கையை வைத்து மெல்ல அவளின் தலைமுடியை கோதிவிட்டார்.

  

அந்த அசைவில் மெல்ல கண்கள் திறந்தாள் பூங்கோதை, அவளின் கண்ணில் முதலில் தெரிந்தது ரமணியின் முகம்தான், கண்கள் கலங்க பெரிய தவறு செய்துவிட்ட குற்ற உணர்ச்சியில் மாட்டி தவித்தபடி இருந்த அவரைக்கண்டு ஏதும் புரியாமல் மென்மையாக சிரித்து,

  

”ரமணியம்மா“ என்றாள் அன்பாக,