Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 08

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 08: - She is...

   

றிவழகனுக்கு தூக்கம் வரவில்லை. புது இடம் என்பது மட்டுமல்லாமல், நள்ளிரவில் நடந்த பல ரகமான புது அனுபவங்களும் அவனின் அட்ரினலினை அதிகமாக்கி விட்டிருந்தது. அதனால் தானோ என்னவோ தூக்கம் சுத்தமாக வரவில்லை.

  

சில மணி நேரங்கள் படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தவன், அதற்கு மேல் அப்படி இருக்க பிடிக்காமல் எழுந்துக் கொண்டான்.

  

எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பதால் வீடு நிசப்தமாக இருந்தது. நேரம் என்ன என்று பார்க்காமலே ஷர்ட்டை போட்டுக் கொண்டு நடந்தான். அவனுக்கு சுஜயின் வீடு முழுக்க தெரியாது என்றாலும், இரவு லிவிங் ரூமில் இருந்த நேரத்தில் அதன் அருகே ஒரு ஃபிரெஞ்சு டோர் இருப்பதை கவனித்திருந்தான். பொதுவாக அது போன்ற கதவுகளை பேடியோ (patio) செல்லும் வழியில் தான் வைப்பார்கள்.

  

அந்த யூகத்தில் அந்த கதவைக் கண்டுப்பிடித்து, யாரையும் தொல்லை செய்யாத விதத்தில் சத்தமில்லாமல் மெல்லத் திறந்தான்.

   

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home