ஒரு வித்தியாசமான காதல் கதை.
ஈரம் ஊறும் கண்ணின் மீது.
”நீ எப்பவும் என்கூடவே இருக்கனும் இருப்பியா?” என தீப்தி ஆர்வமாகக் கேட்க அதற்கு ரிஷியோ,
“கண்டிப்பா இருப்பேன் ஆனா இப்ப எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு, நான் போகனுமே”,
”இப்பதானே என்கூடவே இருக்கனும்னு சொன்னதுக்கு கண்டிப்பா இருப்பேன்னு சொன்ன அவ்ளோதானா உன்னோட லவ்”,
”லவ் இருக்கு, அதை நிரூபிக்க 24 மணி நேரமும் உன்கூடவே இருக்க முடியுமா சொல்லு, எனக்கு வேலையிருக்கு தீப்தி”,
”என்னை விட உனக்கு அந்த வேலைதான் முக்கியமா பேச்சா” என கோபித்துக் கொண்டாள் தீப்தி,
”சரி வேலைக்கு போகாம எத்தனை நாள் உன்கூடவே இருக்க முடியும் சொல்லு”,
”இரு நீ ஏன் வேலைக்குப் போற”,
”அப்புறம் வாழறதுக்கு பணம் வேணாமா”,
”என் அப்பாகிட்ட நிறைய பணம் இருக்கு”,
”அதுக்கு”,
”அது போதாதா நமக்கு”,
”தீப்தி நான் உன்னை லவ் பண்றேன் உன் பணத்தையில்லை, உன் அப்பாகிட்ட நிறைய பணம் இருந்தா அதை அவரே வைச்சிக்கிட்டும், எனக்கு வேணாம், நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி பணம் சேர்க்கறேன், அது போதும் நாம வாழறதுக்கு”,
”வாழறதுக்காக கஷ்டப்படனுமா என்ன? ஈசியா பணம் வருது, ஏன் வேணாம்ங்கற, நீ சரின்னு சொல்லு போதும், என் அப்பா எல்லாத்தையும் உன்கிட்ட கொடுத்துடுவாரு, அவரும் ரிட்டயர்டு ஆகனும்ல”,
”எனக்குப் புரியுது தீப்தி, உன் அப்பாவுக்கு நீ மட்டும்தான் வாரிசு, அவரோட பிசினஸ் எல்லாத்தையும் நீதான் பார்த்துக்கனும் ஆனா, நீ பார்த்துக்க மாட்ட, உன்னை கல்யாணம் செய்துக்கறவன்தான் எல்லாத்தையும் பார்த்துக்கனும் அதானே”,
”அதேதான்”,
”ஆனா தீப்தி எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு, நானும் உன் அப்பா போல பெரிய பிசினஸ்மேன் ஆகனும், அதுவும் என்னோட முயற்சியில ஆகனும்னு ஆசைப்படறேன் உனக்குப் புரியுதா”,
”ப்ச் அதுக்கு எல்லாம் நிறைய காலம் ஆகும், ரெடிமேடா பிசினஸ் இருக்கு அதை எடுத்துக்கோ, உன் கொள்கைபடி நீயும் பெரிய பிசினஸ்மேன் ஆகலாம் என்ன சொல்ற”,
”நோ வே தீப்தி, நான் தனியாவே முயற்சி செஞ்சி பிசினஸ்மேன் ஆகலாம்னு இருக்கேன்”,
”இப்ப என்னதான் சொல்ல வர்ற”,
”சிம்பிள் எனக்கு நீ மட்டும்தான் வேணும், உன்னோட பணம், சொத்துபத்து