Chillzee KiMo Books - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி! - பிந்து வினோத் : Kalyanam panniyum brammachari! - Bindu Vinod

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி! - பிந்து வினோத் : Kalyanam panniyum brammachari! - Bindu Vinod
 

இது ஒரு கலாட்டா சிறுகதை.

 

 

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி!

  

ஞ்சீவின் கண்கள் இமைக்காமல் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த இந்துவின் முகத்தில் நிலைத்திருந்தது.

  

அவனின் பார்வையை கவனித்த இந்து,

  

“சஞ்சு....” என்று எழிலாக சிணுங்கினாள்.

  

“டாலி! நான் என்ன செய்ய? நீ அவ்ளோ அழகா இருக்க! என்னால உன் பக்கம் இருந்து பார்வையை திருப்பவே முடியலை...”

  

“சும்மா பொய் சொல்லாதீங்க சஞ்சு... நான் இல்லாதப்போ நல்லா பொண்ணுங்களை சைட் அடிப்பீங்க, எனக்கு தெரியும்...”

  

“இல்லைடா டாலி...! உன்னை தவிர ஒருத்தியை நான் தேவைக்கு அதிகமா பார்க்கவே மாட்டேன்...”

  

“அவ்வளவு நல்லவரா நீங்க?”

  

“இரண்டு வருஷமா லவ் செய்து, அடுத்த மாசம் கல்யாணம்னு முடிவான பின்பும் நீ அந்த பக்கம், நான் இந்த பக்கம்னு உட்கார்ந்து பேசிட்டு இருக்கோமே, இதில இருந்தே உனக்கு தெரியலையா???”

  

“ஹையோ! சரி சரி... நீங்க ரொம்ப நல்லவர் தான்! நீங்க அப்படி இருந்தா தான் நான் உங்களை மீட் செய்ய வருவேன்னு உங்களுக்கும் தெரியும்... இப்போ பில்ட் அப் கொடுக்குறதை பாரு...!”

  

“ப்ச்... போ டாலி... அவனவன் லவ், மேரேஜ் எல்லாம் தாண்டி லிவ் இன் ரிலேஷன்ஷிப்ன்னு எங்கேயோ போயிட்டான்... நீ இன்னும் தள்ளி உட்காரனும் அப்படி இப்படின்னு கண்டிஷன் போட்டுட்டு இருக்க...”

  

சஞ்சீவின் புலம்பலை கேட்டு பதில் சொல்லாமல் அவனை பார்த்து முறைத்தாள் இந்து!

  

இந்துவின் சூப்பர் டூப்பர் கோபம் & குறும்பு கலாட்டாக்களை பற்றி தெரிந்திருந்த சஞ்சீவ், ஆஹா, ‘டிராகனை’ (dragon) வெளியே இழுத்து விட்டுட்டோம் போலிருக்கே, என மனதினுள் கலங்கினான்... ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,

  

“டாலி டியர்! வாவ்...! இப்படி முறைக்கும் போது எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? யூ லுக் gorgeous! இதுக்காக தான் அப்படி சொன்னேன்...” என்றான்.

  

இந்துவின் முகத்தில் கோப ரேகைகள் குறைந்து மலர்ச்சியும், மெல்லிய வெட்கமும் எட்டி பார்த்தது... ஆனாலும், குரலில் கோபத்தை சேர்த்து,

  

“சும்மா பேச்சுக்கு சொல்லாதீங்க சஞ்சு...! உங்களுக்கு மட்டும் தான் ஆசை, காதல் எல்லாம்? எனக்கு இல்லையா?” என்றாள்...

  

“அது இல்லைடா செல்லம்....”

  

“இருங்க இருங்க... நான் பேசி முடிச்சிடுறேன்... இப்போ காதலியா இருக்க இந்த இந்து உங்க மனைவியா மாறினப்புறம், நானே கூட உங்களை தடுக்க மாட்டேன்... ஐ வில் பீ ஆல் யுவர்ஸ்!”

  

இந்து எப்போதும் சொல்லும் வசனம் தான் அது என்றாலும், சஞ்சீவிற்கு இந்த முறையும் எப்போதும் போல அவள் சொன்னது மனக் கிளர்ச்சியை தந்தது...

  

அவனுக்கு இந்துவின் மீது காதல் என்றால் அப்படி ஒரு காதல்.

  

அவளின் குணம், குறும்புத்தனம், அழகு, புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, ஏன்