Chillzee KiMo Books - பெண் பற்றிய சித்தரிப்பு - சசிரேகா : Pen patriya sitharippu - Sasirekha

பெண் பற்றிய சித்தரிப்பு - சசிரேகா : Pen patriya sitharippu - Sasirekha
 

புதிதாக நான் சிறுகதை எழுதியுள்ளேன் அதன் தலைப்பு பெண் பற்றிய சித்தரிப்பு என்பதாகும். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்கிறேன்.

 
 

 

பெண் பற்றிய சித்தரிப்பு - சசிரேகா,

  

”மச்சான் கதிரேசா என்னடா செய்ற,” என முருகன் தன் நண்பன் கதிரேசனைப் பார்த்து கேட்க அவனோ முகத்தில் ஃபேஸ் க்ரீம் ஒன்றை அதிகளவு தடவியபடியே பேசி வைத்தான்,

  

”இந்த க்ரீம் முகத்தில தேய்ச்சா பொண்ணுங்க பார்ப்பாங்க மச்சி அதான்,” என சொல்ல முருகனுக்கு அதிர்ச்சி,

  

”ஏன்டா பொண்ணுங்க பார்க்கறது இருக்கட்டும் உன்னைப் பார்த்தா பேய் போல இருக்கே எதுக்குடா இவ்ளோ க்ரீமை அள்ளிப் பூசிக்கற,”

  

”சிவப்பாகதான்,”

  

”எதுக்குடா இந்த வேலை உனக்கு, க்ரீம் பூசினா சிவப்பாக முடியுமா என்ன,” என கேட்டவனிடம் நக்கலாக சிரித்த கதிரேசனோ அதற்காகவே தன் வீட்டில் இருந்த டீவியை ஓடவிட்டான். அதில் விளம்பரமாக ஓடிக் கொண்டிருந்தது, அதில் குறிப்பிட்ட ஆண்கள் பயன்படுத்தும் முக க்ரீம் விளம்பரம் வரவும் அதை முருகனிடம் காட்டினான் கதிரேசன்,

  

”இதைப்பாரு,” என சொல்ல முருகனும் பார்த்தான்.

  

அந்த விளம்பரத்தை பலமுறை பார்த்திருக்கிறான், ஆனால் பார்க்கும் போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் கதிரேசன் அதை பெரிதாக எடுத்துக் கொண்டு செயலில் இறங்கியது ஆச்சர்யமாக இருந்தது,

  

”டேய் விளம்பரத்தில காட்டறதெல்லாம் உண்மையில்லைடா, அவங்க சும்மா ஏமாத்தறாங்க பிறந்தப்ப என்ன நிறம் இருக்குமோ அதுதான்டா இருக்கும்,”

  

”ஏன்டா விளம்பரம் செய்றவங்க என்ன முட்டாளா, இந்த க்ரீம்ல விசயம் இல்லைன்னா எதுக்காக விளம்பரப்படுத்தனும்,”

  

”விளம்பரத்துக்கு முக்கியத்துவம் காட்டாத,”

  

”போடா இந்த க்ரீம் அவ்ளோ முக்கியம் இல்லைன்னா எதுக்காக இவ்ளோ விலையா இதை விக்கனும்,” என சொல்ல அதற்காகவே முருகன் அந்த க்ரீமின் விலையை பார்த்து அதிர்ந்து,

  

”டேய் மச்சான் ஏதுடா உனக்கு இதை வாங்க பணம்,”

  

”எப்படியோ வாங்கிட்டேன் விடேன்,” என சொல்லி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான்.

  

அதிகளவு க்ரீம் முகத்தில் பூசி தேயோ தேயோ என தேய்த்து விட்டிருந்தான், அதில் நிறம் மாறி சிவந்திருந்தான், அதைக்கண்டு பூரித்துப் போனவன்,

  

”மச்சான் என்னைப் பாருடா நான் சிவப்பாயிட்டேன்,” என குதூகலமாகச் சொல்ல முருகனுக்கு கடுப்பாக இருந்தது,

  

”மச்சான் நீயும் இதை பூசிக்கடா நீயும் சிவப்பாயிடுவ,” என முருகனிடம் அந்த க்ரீமை தந்தான் கதிரேசன்,

  

”வேணாம்டா எனக்கு இருக்கறதே போதும் சிவப்பாகி நான் என்ன சினிமாலயா நடிக்கப்போறேன்,” என்றான் முருகன்,

  

”நம்ம ஊர் பொண்ணுங்களுக்கு சிவப்பா இருந்தாதான் பிடிக்கும் மச்சி,” என்றான் கதிரேசன்,

  

”அப்படின்னு யார் சொன்னா உன்கிட்ட,” என முருகன் கேட்க அதற்கு கதிரேசனோ,