Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 05

உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 05: - It's not a fairy tale...

   

தான்யா வசதியாக சாய்ந்து அமர்ந்திருந்தாள். ஆனால் இன்னமும் அவள் அதிர்ச்சியில் இருந்து முழுமையாக வெளிவரவில்லை.

   

தன் தோழி எலிசபெத்தை ஜெர்மன்டவுனில் சந்திக்க கிளம்பியவள், தவறுதலாக ஜெர்மன்வேல்லிக்கு வந்திருப்பதை புரித்துக் கொள்ளவே அவளுக்கு ரொம்ப நேரம் எடுத்திருந்தது. அதுவுமே கூட இந்த ஜெர்மன்வேல்லியில் இருந்த ஹேர்பின் பென்டுகளால் தான்! ஒன்று மாற்றி ஒன்று என ஹேர்ப்பின் பெண்டுகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கவும் தான் தான்யாவிற்கு சந்தேகம் எழுந்தது.

  

அவள் எலிசபெத்தின் வீட்டிற்கு முன்பே சென்றிருக்கிறாள். அப்போது இதுப் போன்ற வளைந்த சாலைகள் இல்லையே என்ற சந்தேகத்தின் பேரில் ஜிபிஎஸ் பார்த்தப்போது தான் அவள் செய்திருந்த தவறு தான்யாவிற்குப் புரிந்தது!

  

ஆனால் அந்த ஒரு சில வினாடிகள் கவனப் பிசைவே அவள் தன் காரின் கட்டுப்பாட்டை இழக்க காரணமாகி விட்டது!

   

நல்ல வேளையாக தான்யா சமயோசிதமாக காரை ஒடித்து திருப்பினாள். அதனால் கார் ‘நூற்றி ஓராவது’ ஹேர்பின் பென்டில் கீழே விழாமல் தப்பியது. இல்லை என்றால் இந்நேரம் அவள் மலை அடிவாரத்தில் வீழ்ந்து இருப்பாள்!

   

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home