அத்தியாயம் 04: - And they meet...
அறிவழகனால் தன்னை மென்மையாக தாக்கியது எது என்று உடனே உணர்ந்துக் கொள்ள முடியவில்லை.
யார் என்றே தெரியாத ‘அவளை’ விபத்தின் நடுவே பார்த்ததும், அவள் சொன்ன வார்த்தைகளும், எதிர்பாராத அவளின் முத்தமும் அவனை திகைக்க வைத்தது உண்மை.
அறிவழகன் யாருடனும் சீரியஸ் கமிட்டட் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், பெண்கள் சகவாசமே இல்லாமல் இருக்கவும் இல்லை. அவனுக்கு பெண் தோழிகள் இருக்கிறார்கள். அவர்களில் எத்தனையோ பேர் கன்னம் என்ன, உதட்டில் கூட முத்தமிட்டு இருக்கிறார்கள்.
ஆனால் அது எதுவுமே இவளின் முத்தத்திற்கு ஈடாக முடியாது! இதுப் போன்ற ஷாக் அடிக்கும் உணர்வை அவன் உணர்ந்ததே கிடையாது.
இவளிடம் ஸ்பெஷலாக என்னமோ இருந்தது... என்ன என்று அவனால் சொல்ல முடியவில்லை! ஆனால் என்னவோ இருந்தது... இருக்கிறது...!!!
ஒரே வினாடியில் அறிவழகனின் மனதில் இத்தனை எண்ணங்களும் அலைமோதியது...
ஆனால் அவனின் கைகள் அவளை காரில் இருந்து வெளியே எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுப்பட்டுக் கொண்டே தான் இருந்தது.
“என்ன ஆச்சு அறிவழகன்?” என்று சுஜய் கேட்டுக் கொண்டு அங்கே ஓடி வரவும், அறிவழகன் தன்னிலைப் பெற்றான்.
தன் கையில் மயக்க நிலையில் இருந்தவளை கண்களால் நண்பனுக்கு சுட்டிக் காட்டினான்.
“ஹர்ஷா 911 கூப்பிட்துட்டு இருக்கா, அறிவழகன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திருவாங்கன்னு நினைக்கிறேன்.”
- Bindu Vinod
- Bindu
- Vinod
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Family
- Romance
- Series
- Just Romance
- Tamil
- Drama
- Books