உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 03: - What's he up to?

றிவழகன் உடனடியாக பதில் சொல்லாமல் கையில் இருந்த ஜூஸைப் பருகினான். அவனின் எதிரே இருந்த இருவருமே அவனாக பேசட்டும் என்று பொறுமையாக காத்திருந்தார்கள்.

   

அவர்களின் பொறுமையை சோதிப்பதுப் போல ஒன்றிரண்டு நிமிடங்கள் அமைதியிலே கடந்தது.

  

ஹர்ஷா தன் எதிரே அமர்ந்திருப்பவனைப் எடைப் போட்டாள்.

  

இவன் அறிவழகன், சுஜயின் நண்பன்! பெரிய பணக்காரன்! இந்த விபரங்கள் அவளுக்கு தெரிந்திருக்காவிட்டால் இவனைக் குறித்து என்ன நினைத்திருப்பாள்??

   

சரியாக படியாத தலை முடி!

   

எண்ணெய் அல்லது ஹேர் ஸ்ப்ரே அடித்து வாரினால் அடங்கக் கூடும்! ஆனால் அறிவழகனோ அலட்டாமல் அதை அதன் பாட்டிற்கு விட்டிருந்தான். அதனால் தலை முடி கன்னாபின்னாவென்று இருந்தது! ஜப்பானிய கார்ட்டூன்களில் வருவதுப் போல தலை முடி நெற்றியை தாண்டி அறிவழகனின் கண் வரை கூட வந்திருந்தது.

   

அதை அவ்வப்போது தலையை சிலுப்பி சரி செய்துக் கொள்வது அறிவழகனின் மேனரிசம் போலும்! கடந்த இருபது – முப்பது நிமிடங்களில் ஒரு பத்து தடவை அப்படி செய்து விட்டான்!

   

இது போதாதென்று ட்ரிம் செய்யாத தாடி வேறு!

  

பார்க்க ரவுடி போல தான் இருக்கிறான்! இவனின் ஆறடி உயரம் அவனுக்கு கம்பீரத்தை கொடுத்ததுடன், 

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home