உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod
 

அத்தியாயம் 01: - Let’s meet Tanya

  

தான்யா சட்டென்று எழுந்து அமர்ந்தாள். அவளின் நெற்றி முழுக்க வேர்வைத் துளிகள் தோன்றி இருந்தது. எப்போதும் வரும் அதே கனவு இன்றும் அவளை தூக்கத்தில் இருந்து விழிக்க வைத்திருந்தது. மைக்கேல் இறந்த நாளில் இருந்தே அவளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் கனவு இது.

  

தான்யா எங்கோ உயரத்தில் இருந்து கீழே விழுகிறாள்... விழுந்துக் கொண்டே இருக்கிறாள்... எங்கெங்கும் இருள் மட்டுமே இருக்கிறது...

  

“யாராவது காப்பாத்துங்க!” என்று அவள் அலறுவது எதிரொலித்து அவளையே மிரளச் செய்தது. ஆனால் பதில் எதுவும் இல்லை!

  

எங்கே இருக்கிறாள், எங்கிருந்து விழுகிறாள் ஒரு தடயமும் இல்லை.

  

ஒவ்வொரு தடவையும் யாராவது அவளை கையில் தாங்கிப் பிடித்து காப்பாற்ற மாட்டார்களா என்ற எண்ணம் எழும்... ஆனால ஒரு தடவையும் அவளை யாரும் காப்பாற்ற வந்ததில்லை...   

 

 
 
 
 
 

Chillzee KiMo - Just Romance Series #01 - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : Un parvai karpoora deepama?! - Bindu Vinod - Series Home