Chillzee KiMo Books - நம்பிக்கை எனப்படுவது யாதெனில் - சசிரேகா : Nambikkai enappaduvathu yaathenil - Sasirekha

நம்பிக்கை எனப்படுவது யாதெனில் - சசிரேகா : Nambikkai enappaduvathu yaathenil - Sasirekha
 

நம்பிக்கை எனப்படுவது யாதெனில் - சசிரேகா

கட்டுரை.

 

 

கட்டுரை - நம்பிக்கை எனப்படுவது யாதெனில் - சசிரேகா,

  

நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய விசயம் அது சாதாரணமாக எல்லாரோடமிருந்தும் கிடைப்பதில்லை, நாம் யாரை அதிகமாக நம்புகிறோமோ அவர்கள்தான் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு துரோகம் செய்வார்கள், அந்த சமயத்தில் அவர்களை நாம் தவறு சொல்வதா இல்லை அவர்களை நம்பின காரணத்திற்க்காக நம்மை நாமே தவறு சொல்வதா, அப்படி நம்மை நாமே தவறு சொல்லிக் கொள்ள எத்தனை பேரால் முடியும், நிறைய பேர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்,

  

காரணம் நம்மை நாமே தவறு சொல்லிக் கொண்டால் நாம் முட்டாள்கள் என்கிற பகுதிக்கு  தள்ளப்படுவோம், மற்றவர்களை நம்பிய ஒரு காரணத்துக்காக முட்டாளாக யார்தான் சம்மதிப்பார்கள், அதற்காக நமக்கு கெடுதல் செய்தவர்களை நம்மால் தண்டித்துவிட முடியுமா என்ன ?,

  

பெரிதாக என்ன செய்வோம், சண்டை போடுவோம் அப்படி சண்டையிட்டால் நமது முட்டாள்தனம் வெளிப்பட்டுவிடும் அதனால் இதன்பிறகு அவர்களுடன் நாம் பழகமாட்டோம் நம்பிக்கை வைக்க மாட்டோம் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மற்றவர்களை கூட நம்ப நிறைய யோசிப்போம்,

  

யோசித்து யோசித்து யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என நாமே நம்மிடம் ஒரு பரிட்சை வைத்து அதில் நமக்கு நாமே கேள்விகளும் கேட்டு அதற்க்கான பதிலையும் சொல்லி அதற்கு நாமே மதிப்பெண்களும் போட்டுக் கொள்வோம், அதில் எவராலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எப்பொழுதுமே எடுக்க இயலாது அதுதான் நிதர்சனமான உண்மை,

  

இருந்தாலும் நிறைய மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அதற்கான அர்த்தம் மிகச் சுலபம்  யாரோ ஒருவர் நம்மை ஏமாற்றி துரோகம் செய்ததற்க்காக மற்றவர்களை நம்பாமல் இருப்பது முட்டாள்தனம், எல்லோரும் அவர்களைப் போல இருக்க மாட்டார்கள், எல்லோரும் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள், அதனால் நாம் மற்றவர்களை நம்பலாம் என முடிவு எடுப்போம், அதன்படி மற்றவர்களை நம்ப ஆரம்பிப்போம்,