Chillzee KiMo Books - நான் என்பதே நீ தானடி - Chillzee Originals : Naan enbathe nee thanadi - Chillzee Originals

நான் என்பதே நீ தானடி - Chillzee Originals : Naan enbathe nee thanadi - Chillzee Originals
 

நான் என்பதே நீ தானடி - Chillzee Originals

Another edition available.

காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??

இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!

இது ஒரு எளிய, இனிய காதல் கதை!

 

அத்தியாயம் – 01,

  

ஸ்டீன் பீபர் குரல் இனிமையாக பாடிக் கொண்டிருந்தது.

  

Don't you give up, nah, nah, nah,

  

I won't give up, nah, nah, nah,

  

Let me love you,

  

Let me love you,

  

smuleல் பாடி கொடுமைப் படுத்துபவர்களுடன் போட்டிக்கு போபவனை போல இனியவனும் ஜஸ்டீன் பீபருடன் சேர்ந்து பாடிக் (கத்திக்) கொண்டிருந்தான்.

  

“இனியா, சவுண்டை கம்மி செய். பக்கத்து வீட்டுல இருக்கவங்க எல்லாம் கம்ப்ளெயின்ட் செய்யப் போறாங்க”,

  

“என்னம்மா நீங்க!. எப்போ பாரு பக்கத்து வீட்டுக்காரங்களையும் எதிர் வீட்டுகாரங்களையும் பத்தியே கவலைப் படுறீங்க”,

  

“சரி, சரி புலம்பாதே. நீ ரெடியா கிளம்பலாமா? டிரைவர் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு.”,

  

“நான் ரெடிம்மா. இந்த டீ ஷர்ட் எப்படிம்மா இருக்கு லாஸ்ட் வீக் வாங்கினேன்”,

  

“போன மாசமும் இதே மாதிரி ப்ளூ கலர்ல ஒன்னு வாங்கினீயேடா? அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?”,

  

“அது நேவி ப்ளூம்மா. இது சபையர் ப்ளூ”,

  

“என் கண்ணுக்கு இரண்டும் ஒரே ப்ளூவா தான் தெரியுது”,

  

“ஊருக்கு போயிட்டு வந்த உடனே ஒரு நல்ல கண் டாக்டர் கிட்ட உங்களை கூட்டிட்டு போய் கண்ணாடி வாங்கி மாட்டி தரேன்”,

  

“உனக்கு ப்ளூ கலர் பிடிக்கும்னு உண்மையை சொல்லு. அதை விட்டுட்டு எனக்கு எதுக்கு கண்ணாடி வாங்கி தரேன்னு சொல்லி ஏமாத்துற?”,

  

“ஜெயா, அவன் ரெடியா? போலாமா?”,

  

“அப்பா கூப்பிடுறார். லேட்டா போனா திட்டுவார். வா போகலாம்”,

  

அம்மா ஜெயஸ்ரீ முன்னே போக, இனியவன் ப்ளூடூத் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு ஐபோனில் அதை pair செய்துக் கொண்டு பின்னே நடந்தான்.

  

“பெட்டி எல்லாம் காருல வச்சாச்சாங்க?”,

  

“எல்லாம் வச்சாச்சு? கிளம்புறது தான் பாக்கி. நீங்க காருல உட்காருங்க. நான் கதவை எல்லாம் பூட்டிட்டு வரேன்.”,

  

அப்பா அருணாச்சலம் நகர்ந்த உடனே அம்மாவின் காதை கடித்தான் இனியவன்.

  

“என்னம்மா அப்பா டை எல்லாம் அடிச்சு, பயங்கர மேக்கப்ல இருக்கார்?”,

  

“அவரு ஊருக்கு போறோமேடா அதனாலயா இருக்கும்”,

  

“ஒரு வேளை அவரோட ஸ்கூல் டைம் லவ்வர் அங்கே தான் இன்னும் ,