இது ஒரு ஈஸி ரொமான்ட்டிக் கதை. ஜெனி, மார்ட்டின் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். அந்த எதிர்பாராத திடீர் சந்திப்பு காதலாக மாற கூடுமா?
1.
“சாரி, யுவர் பிளைட் இஸ் கேன்சல்ட்”.
ஜெனிபர் அழாத குறையாக நின்றாள்.
இந்த வருட குளிர்க்காலம் மற்ற வருடங்களை விட கடுமையாக இருந்தது. ஒரு வழியாக குளிர்காலம் முடிந்து வசந்தக் காலம் வந்து விட்டது என்று சந்தோஷப்படாதவர் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
அந்த சந்தோஷத்தை கெடுப்பதுப் போல இப்படி ஒரு பனிப்புயல் வரும் என ஒருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
அதுவும் ஜெனிபர் பயணம் செய்ய தேர்ந்தெடுத்த நாளில் தானா இந்த புயல் வர வேண்டும்??.
விமானங்களின் புறப்பாடு, மற்றும் தரை இறங்கும் விபரங்களை பதிவு செய்யும் பலகையை கவனித்தாள்.
அவளுடையதுப் போலவே பல் வேறு விமானங்கள் ரத்து செய்யப் பட்டு இருந்தன.
கிட்டத்தட்ட அனைத்து விமான புறப்பாடுகளும் ரத்து செய்யப் பட்டு மொத்த விமான போக்குவரத்தும் ஸ்தம்பித்திருந்தது.
அதனால் தான் போலும், விமான நிலையத்தில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் இருந்தார்கள்.
ஒவ்வொரு கவுன்டரிலும் பெரிய வரிசை இருந்தது. விமான ஊழியர்கள் பயணிகளின் கேள்விகளுக்கு இயன்ற அளவு பொறுமையாக பதில் சொல்ல முயன்றுக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு விதமாக சொன்னாலும் அவர்கள் அனைவரின் பதிலும் ஒன்றே தான், அடுத்த விமானம் எப்போது புறப்படும் என்று தெரியாது.
ஜெனிபர் சூட்கேஸை இழுத்துச் சென்று ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“உனக்காக தான் இந்த டேட் செலக்ட் செய்திருக்கேன் ஜெனி. நீ மட்டும் வரலை, அவ்வளவு தான்!”
தோழி சுவாதி அவளை பயங்கரமாக மிரட்டி வைத்திருந்தாள்.
சுவாதியும் ஜெனிபரும் நிறைய வருட தோழிகள். அவர்களின் நட்பு பள்ளிக் காலத்திற்கு முன்பே டே கேரில் தொடங்கி விட்டது. அதன் பின் பள்ளி, கல்லூரி இரண்டிலுமே இருவரும் ஒன்றாக படித்தார்கள். அவர்களை மற்றவர்கள் இரட்டையர்கள் என்றுக் கூட சொல்லி கேலி செய்வார்கள்.
எப்போது மலையாக குவிந்திருக்கும் பனியை அப்புறப் படுத்துவார்கள்? எப்போது தான் விமானத்தை இயக்குவார்கள்?.
விமானம் கிளம்பாமல் அவள் எப்படி சுவாதியின் கல்யாணத்திற்கு போவது?.
மார்ட்டின் கையில் சூடான காபியுடன் தன்னை சுற்றி இருந்த மனிதர்களை வேடிக்கைப் பார்த்தான். எங்கெங்கும் குழப்பமாக இருந்தது.
ஒரே நாளில் இத்தனை விமானங்கள் ரத்தானால் மக்கள் வேறு என்ன செய்வார்கள்?.
மார்ட்டினுக்கு விமானங்கள், விமான நிலையங்கள் எல்லாம் நன்றாக