Chillzee KiMo Books - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - பிந்து வினோத் : Enakkoru snegithi thendral maathiri...! - Bindu Vinod

எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - பிந்து வினோத் : Enakkoru snegithi thendral maathiri...! - Bindu Vinod
 

எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - பிந்து வினோத்

Second edition.

வணக்கம் நட்பூஸ்,

இன்னொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்தக் கதையின் ஹீரோ ஹீரோயின் உங்களுக்கு பரிச்சயமானவர்கள் தான் - நான்ட்ஸ் & எஸ்.கே. ஹீரோ ஹீரோயின் பெயர் கேட்ட உடனேயே கதையில் என்ன எதிர்பார்க்கலாம் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் ;-)

என்னுடைய மற்ற கதைகள் போல இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன்! நன்றி :-)

 

கதை சுருக்கம்:

நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!

அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!

நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??

சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?

நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???

- பிந்து வினோத்

 

 

அத்தியாயம் 1

ந்தினி!

  

நம் கதையின் கதாநாயகி!

  

இருபத்தி எட்டு வயதாகும் கன்னிகை!

  

இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அமெரிக்க சார்லட் (Charlotte) நகர கிளையில் ப்ராஜக்ட் மேனேஜராக பணியாற்றுபவள்.

  

அலட்டலில்லாமல் சாதாரணமாக கிளிப் செய்யப்பட்ட கூந்தல். வேலைக்கு ஏற்ற ப்ரோஃபஷ்னல் பேன்ட் – ஷர்ட்! இது தான் நந்தினியின் ட்ரேட்மார்க் இமேஜ்!

  

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிப்பவள் என்றாலும் முகத்தில் பெயருக்கும் மேக்கப் கிடையாது! ஏன் சின்ன பொட்டு கூட கிடையாது!

  

அவளுக்கு பதிமூன்று வயதான போது, அவளின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிப் பெயர்ந்தார்கள். இங்கே வந்த இரண்டு வருடங்களில் அவளின் அம்மா இறந்து விட, நந்தினியின் வாழ்க்கையே தலைகீழாக மாறிப் போனது!

  

அவளின் அம்மா இறந்த இரண்டு வருடங்களில் அவளின் அப்பா அமெரிக்கக் பெண் ஒருத்தியை திருமணம் செய்துக் கொண்டார். அது முதல் மெல்ல மெல்ல அவளின் அப்பாவும் அவளின் வாழ்வில் இருந்து விலகி செல்ல தொடங்கினார்.

  

எப்படியோ படித்து பட்டம் பெற்று நல்ல சம்பளத்துடன் வேலையையும் பெற்று விட்டாள்!

  

ஆனால் குடும்பம் என்ற ஒன்று அவளுக்கு எப்போதுமே கசக்கும் பாகற்காயாகவே இருந்தது!

  

அவளுக்கு சுவாசக்காற்று, உணவு, நீர் எல்லாமே அவளின் வேலை மட்டுமே!

  

**********

  

க்ளையன்ட்டிடம் இருந்து வந்திருந்த கேள்வி ஒன்றிற்கு அவசர அவசரமாக பதில் ஈமெயில் டைப் செய்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

  

“நந்தினி, இவர் சதீஷ் குமார். உன் டீமுல புதுசா அனலிஸ்ட்டா ஜாயின் செய்திருக்கார்...

  

அண்ட் சதீஷ், இவங்க உன்னோட ப்ராஜக்ட் மேனேஜர். பேரு நந்தினி. அவங்களும் தமிழ் தான்...”

  

வேக வேகமாக அடித்துக் கொண்டிருந்த ஈமெயிலை நிறுத்தி விட்டு, சக மேனேஜரான ஆர்த்தி அறிமுகம் செய்தவனை ஆர்வம் இல்லாமல் பார்த்தாள் நந்தினி!

  

இவனென்ன பனைமரத்தின் குடும்பத்தில் இருந்து வந்தவனா, இவ்வளவு உயரமாக இருக்கிறான்?

  

“ஹெலோ நந்தினி! நான் 6.2 ஃபீட்” என அவளின் மனதில் ஓடிய கேள்விக்கு தானாகவே பதில் சொன்னான் அந்த சதீஷ்!

  

எரிச்சலுடன் பார்வையை திருப்பியவள்,