குற்றம் யாரோ!! - கோகுலப்ரியா
காதல் கதை.
குற்றம் யாரோ!!
மாலை மணி மூன்றை நெருங்கி கொண்டிருந்தது. ப்ரியா அவள் கை கடிகாரத்தை அவ்வவ்போது பார்த்துக்கொண்டே கணினியில் மும்மரமாக டைப் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஏதோ பைல் எடுப்பதற்காக அந்த பக்கம் வந்த கவிதா, ப்ரியா இன்னும் கிளம்பாமல் இருப்பதை பார்த்து, என்னடி மணி மூன்றாகி விட்டது இன்னும் கிளம்பாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினவினாள். ப்ரியா ஏதோ சொல்ல முட்பட, கவி அவள் வாயை மூடி நீ எதுவும் சொல்ல வேண்டாம், நேரமாகி கொண்டிருக்கிறது முதலில் நீ கிளம்பு, அனுப்ப வேண்டிய பைல்ஸ் எல்லாம் நான் சரி பார்த்து கொள்கிறேன் என்றாள்.
ப்ரியாவும் சரியென்று தலையசைத்து அவள் வலது கை கட்டைவிரல் நகத்தை கடித்து கொண்டே அவள் கைபேசி மற்றும் ஹேண்ட் பேக்கை தேடி கொண்டிருந்தாள். ப்ரியாவின் கண்ணெதிரே இருந்த அவற்றை எடுத்து அவள் கையில் திணித்தாள் கவிதா. ப்ரியா ஒரு நமட்டு சிரிப்புடன் அவற்றை கவிதாமிடமிருந்து பெற்று கொண்டாள். கவிதாவும் ப்ரியாவை செல்லமாக ஒரு முறை முறைத்து, பதற்றத்தில் கண்ணெதிரே இருக்கும் பொருட்கள் கூட உனக்கு தெரியவில்லை என்றாள். பதிலுக்கு அவள், அதான் எடுத்து தர என் அன்பு தோழி நீ இருக்கிறாயே என்று செல்லமாக கவிதாவின் கன்னத்தில் கிள்ளினாள். கவிதா முகத்தை மெதுவாக சிலிப்பியவாரே இதற்கொன்றும் கொறைச்சல் இல்லை, சரி என்னை கொஞ்சியது போதும், நீ கிளம்புவதற்கு முன்பதிவு செய்துள்ள டாக்ஸி வந்து ஐந்து நிமிடங்கள் மேல் ஆகிறது, எக்ஸ்ட்ரா சார்ஜ் போடுவதற்குள் சீக்கிரம் கிளம்பு என்று அவசரப்படுத்தினாள்.
ப்ரியாவும் சரிசரி என்று சொல்லி அவள் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை ஒருமுறை சரி செய்து கொண்டே அவள் பர்சில் இருந்த சிறிய கண்ணாடியில் தன் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி ஒரு பார்வை பார்த்துக்கொண்டு மெல்லியதாய் சிரித்தாள். அந்த பதற்றதிலும் தன் அழகை ரசிக்க அவள் தவறவில்லை. கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவாறே கவியிடம் எல்லாம் நன்றாக முடியுமா என்று அப்பாவியாய் கேட்டாள். கவியும் ப்ரியாவை அணைத்தபடியே எல்லாம் நல்லபடியாக முடியும், நீ தைரியமாக சென்று வா என்று சொல்லி புன்னகைத்தாள். அவளுக்கு அந்த அணைப்பு கொஞ்சம் ஆறுதல் அளிப்பது போலிருந்தது.
பின் டாக்ஸியில் ஏறிய ப்ரியா அவள் போனில் நான் கிளம்பி விட்டேன் இன்னும் அரை மணிநேரத்தில் ஹோட்டலை அடைந்து விடுவேன் என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள். அடுத்த நொடியே 'பீப்பீப்' என்று ப்ரியாவின் கைபேசி சத்தம் போட்டது. உடனே அவள் தன் போனை எடுத்து பார்த்தாள், அதில் மேனேஜர் இன்னும் வரவில்லை வந்ததும் சொல்லி விட்டு கிளம்பிவிடுவேன் என்று பதில் செய்தி வந்திருந்தது. இதை பார்த்து கடுப்பாகி போன ப்ரியா, போன் செய்து இன்று எவ்வளவு முக்கியமான நாள் இன்று கூட பொறுப்பில்லாமல் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாயே, என்னமோ செய் என்று எதிர்தரப்பு பதிலை கூட கேட்காமல் கோபமாக கத்தி விட்டு இணைப்பை துண்டித்து விட்டாள். பிறகு மேற்கொண்டு கைபேசியை பார்க்க மனமில்லாமல் அதை ஹேண்ட் பேக்கிற்குள் தூக்கி போட்டு ஜன்னல் வழியே சாலையில் உள்ள கடைகளை வேடிக்கை பார்த்தவாறே வந்தாள். இடையில் ஏழு எட்டு தடவைக்கு மேல் அவள் அலைபேசியில் இருந்து 'பீப்பீப்' என்ற சத்தம் வந்து கொண்டிருந்தாலும் அவள் அதை சட்டை செய்யவில்லை.
பரபரப்பான சாலையில் மிதமான வேகத்தில் டாக்ஸி சென்று கொண்டிருக்கையில் சிக்னலில் மாட்டிகொண்டது. நீண்ட நெடிய வரிசையில் ஹார்ன் சத்தங்களுடன் சிறு இடைவெளி கூட இல்லாமல் பலாப்பழத்தில் ஈக்கள் மொய்ப்பது போல வண்டிகள் பச்சை சிக்னல்காக காத்து நின்றன. சிகப்பு விளக்கு போட்டு பச்சை விளக்கு வரவிருக்கும் அந்த சிறிய இடைவெளியில் ஒரு அம்மா சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரிடமும் பூ விற்று கொண்டிருந்தாள். ப்ரியாவிடமும் சென்று பூ வாங்கிக் கொள்ளுமாறு கூவினாள். ப்ரியாவிற்கு அப்போது இருந்த மனநிலையில் பூ வாங்க விருப்பமில்லையென்றாலும் கூடையில் இருந்த சிவப்பு ரோஜாவை பார்த்ததும் அதுவரை 'உர்ர்ர்' என்று இருந்த முகம் மெதுவாக மலர்ந்தது. பின்பு ஒரு சிவப்பு ரோஜாவை வாங்கி கொண்டு மெல்லிய புன்முறுவலுடன் ரோஜா இதழ்களை