கன்னத்தில் ஒன்னே ஒன்னு! - பிந்து வினோத்
இது ஒரு ஸ்வீட் குட்டிக் கதை :-)
கன்னத்தில் ஒன்னே ஒன்னு!
பளார்...!
திருவிளையாடல் படத்தில் ஒரு பாடலில் சிவாஜிகணேசன் கைகளை அசைத்ததும் உலகமே அசையாமல் நின்று போவதாக ஒரு காட்சி வரும். அதே தான் இங்கேயும் நடந்தது.
அந்த ‘அறை’யுடன் அனைத்தும் ஃபிரீஸ் ஆகிப் போய் நின்றது!
பேப்பர் படித்துக் கொண்டிருந்த செவ்வந்தி நடந்ததை நம்ப முடியாமல் விழிகளை விரித்து பார்த்தபடி இருந்தாள்.
காலேஜுக்கு கிளம்பிக் கொண்டிருந்த கீதா, வாயில் இருந்த இட்லியுடன் ஸ்டன் ஆகி இருந்தாள்.
அடி வாங்கிய தியாகு (எ) தியாகராஜன் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தான். அவனின் கன்னம் சிவந்து மின்னிக் கொண்டிருந்தது.
இந்த ‘ஃப்ரீஸ் எபக்ட்’டிற்கு காரணமான அறையை வழங்கிய கீர்த்தி (எ) கிருத்திகா அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்தாள்.
அறைந்த அதே கை இப்போது நடுங்கிக் கொண்டிருந்தது.
நடந்ததை அவளால் இன்னமும் நம்ப கூட முடியவில்லை.
எத்தனையோ முறை மனதினுள் நினைத்திருக்கிறாள்...! ஆனால் நிஜமாக அடிப்பது???
தியாகுவின் கோபம் மின்னிய கண்களை பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது. அவன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க அவளின் இதயம் தன் துடிப்பை ஸ்கிப் செய்தது!
என்ன செய்ய போகிறான்? பதிலுக்கு அறையப் போகிறானா???
மனதினில் கிலியுடன் அவள் நிற்க,
“டேய் கிளம்பலாமா? ரொம்ப டைம் ஆச்சு” என்ற ஷிவாவின் குரல் கேட்டது.
ஷிவா தியாகுவின் நண்பன் & பார்ட்னர்.
ஷிவாவின் குரலில் நின்ற தியாகு, மீண்டும் ஒருமுறை கீர்த்தியை முறைத்து விட்டு,
“போகலாம்டா... நான் ரெடி...” என்று சொல்லி விட்டு நடந்தான்.
தியாகு கிளம்பி சென்ற பின்பு தான் கீர்த்தியால் மூச்சே விட முடிந்தது.
அவள் மட்டுமல்லாமல் செவ்வந்தி, கீதா இருவரும் கூட அப்போது தான் அசையவே செய்தார்கள்!
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
கீர்த்தியின் முகத்தை பார்த்து செவ்வந்திக்கு என்ன தோன்றியதோ,
“இதை நான் அவனோட சின்ன வயசிலேயே செய்திருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும்....” என்றாள் கீர்த்தியை தேற்றும் எண்ணத்துடன்.
செவ்வந்தியின் மூத்த மகன் தியாகு, இளைய மகள் கீதா. தியாகுவின் மனைவி கீர்த்தி. இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுப்
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Bindu Vinod
- Bindu
- Vinod
- Family
- Romance
- shortRead
- Tamil
- Drama
- Books
- from_Chillzee