உன் புன்னகை என்ன விலை - சசிரேகா
புதிதாக நான் எழுதிய உன் புன்னகை என்ன விலை எனும் குறுநாவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்திருக்கிறேன்.
Chillzee Reviews
Check out the Un punnagai enna vilai story reviews from our readers.
உன் புன்னகை என்ன விலை - சசிரேகா,
காஞ்சிபுரம்,
ஒரு பெரிய பாரம்பர்யமான வீடு, எத்தனையோ தலைமுறைகளை பார்த்துவிட்டது, இன்றும் எந்த ஒரு சேதாரமும் இன்றி கம்பீரமாக இருந்தது, அந்த வீட்டில் வாழ்ந்த தலைமுறை மக்களில் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குள் எதிர்பாராத சண்டை சச்சரவு ஏற்பட அதனால் அந்த வீட்டின் நிம்மதி பறிபோனது.
அனைவருமே சொந்தங்கள்தான் யாரும் யாரையும் குறை கூற இயலாது ஆனாலும் பிரிவு வந்துவிட அந்த பெரிய வீட்டையே இரண்டாக பிரித்தார்கள், தெருவில் இருந்த துளசி மாடத்தில் இருந்து ஆரம்பித்து வீட்டு வாசல்கதவு அதன் பின் பெரிய வராண்டா அடுத்தது முற்றம், அதைக்கடந்து பல அறைகள் பின் பக்கம் கொல்லை அங்கு இருந்த கிணறு வரை இரண்டாக சரிசமமாக பிரித்து பாகம் கொண்டாடினார்கள்.
பாகம் பிரிந்ததால் யாரும் அந்த பக்கம் இந்த பக்கம் என கலந்துவிடக்கூடாது, தவறாக கூட சென்றுவிடக்கூடாதென நினைத்து நடுவில் கோடு போட்டு அதன் மீது பெரிதாக முள்வேலி அமைத்தார்கள், அவர்கள் நினைத்திருந்தால் அந்த முள்வேலிக்கு பதிலாக ஒரு பெரிய சுவற்றையே கட்டியிருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் வேலி மட்டும் அமைத்தார்கள்.
என்னதான் வீட்டை இரண்டாக்கி இருபுறமும் அவரவர்கள் பங்கில் வாழ்ந்து வந்தாலும் சண்டை சச்சரவுக்கு குறைவில்லாமல் போனது, அதில் நிம்மதியிழந்த இரு பக்கத்தையும் சேர்ந்தவர்கள் பரம்பரை வீடு என்று கூட பாராமல் யார் யாருக்கோ விற்றுவிட்டு அந்த ஊரை விட்டே சென்றுவிட்டார்கள்.
இப்போது அந்த பரம்பரை வீடு வேறு பலரின் கைகளுக்குச் சென்று கடைசியில் பார்த்தசாரதியின் குடும்பத்திடம் ஒரு பங்கு வந்து நின்றது, இத்தனைக்கும் அந்த பாக சொத்தை வாங்கினது பார்த்தசாரதியின் தாத்தாதான், அவருக்கு அடுத்தே 3 தலைமுறைகளை பார்த்துவிட்டது அந்த வீடு.
ஆனாலும் முள்வேலிக்கு வலது பக்கம் அவர்கள் தங்கியிருந்தார்கள், இடது பக்கம் இருந்த பாக வீடு யாரும் கவனிப்பாரின்றி கிடந்தது இரும்பாலான முள்வேலி கூட தண்ணீர் மழை நீர் பட்டு துருப்பிடிக்கத் தொடங்க அதை அவ்வப்போது மாற்றிக் கொண்டே வந்தார்கள், அவ்வாறு மாற்றும் நாள் வரவும் பார்த்தசாரதி சலித்துக் கொண்டான்,
”சே இப்படி வேலியை மாத்தறதுக்கு பதிலா அந்த பக்கம் இருக்கற பங்கையும் நாமளே வாங்கியிருக்கலாமே, இல்லையா வேலிக்கு பதிலா பெரிசா சுவரே எழுப்பியிருக்கலாமே, இது ஒரு தண்டச்செலவு” என சலித்துக் கொண்டே வேலியை மாற்ற அதைக்கேட்ட அவனது தந்தை சீனிவாசனோ,
”நல்ல விலைக்கு வந்ததேன்னு இந்த பாகத்தை வாங்கினாரு உன் தாத்தா, அடுத்த பாகத்துல யாராவது வந்து தங்குவாங்க, அவங்ககிட்ட கேட்டு சுவர் எழுப்பலாம்னு பார்த்தா அதை யார் வாங்கினாங்கன்னு தெரியலையே”,
”நாம வேணா அது யார் என்னன்னு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கேட்டு தெரிஞ்சிக்கலாமாப்பா”,
”பல தலைமுறைக்கு முன்னாடி வித்தாங்க, யார் யார் கைக்கு போயிருக்கோ என்னவோ, ம் அந்த பக்கம் பாரு கவனிப்பாரின்றி எப்படி இருக்குன்னு, இதுக்கு அப்புறம் அங்க யார் வந்து தங்கப் போறாங்களோ பாவம், இனி வர்றவங்க கிட்ட சுவரை பத்தி கேட்டுக்கலாம் சாரதி அதுவரைக்கும் பொறுமையா இரு”,
”இருந்தாலும் அப்பா இது சரியான நச்சுபிடிச்ச வேலையால இருக்கு” என அலுப்பாக சொல்லிவிட்டு அந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்தவன்,
”சரிப்பா வேலியை மாத்தியாச்சி நான் வேலைக்குக் கிளம்பறேன்”,
”இரு நானும் வரேன்” என சொல்லிவிட்டு அவர் செல்ல சாரதியோ தான் அமைத்த முள்வேலியை தாண்டி அந்த பக்க வீட்டைக் கவனித்தான்,
”என்னிக்கோ நீ எனக்கு கிடைக்கப்போற அப்ப பாரு உன்னை நான் எவ்ளோ