Chillzee KiMo Books - என்னோடு நீ உன்னோடு நான் - சசிரேகா : Ennodu nee unnodu naan - Sasirekha

என்னோடு நீ உன்னோடு நான் - சசிரேகா : Ennodu nee unnodu naan - Sasirekha
 

என்னோடு நீ உன்னோடு நான் - சசிரேகா

முன்னுரை

சண்டைக்கோழிகளான நாயகன் மற்றும் நாயகிக்கு பெரியவர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடைபெறுகிறது திருமணத்திற்கு பின்பு இவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளினால் இருவரும் இணைந்தனரா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

 

பாகம் 1,

  

வலங்கைமான்,

  

15 வருடங்களுக்கு முன்பு….

  

கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள வலங்கைமான் என்ற கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்க இன்னொருபுறம் நடந்த வாண வேடிக்கைகள் அங்குள்ள மக்களின் மனதை கவர்ந்துக் கொண்டிருந்தது,

  

புது உடைகள் அணிந்து ஆண்களும் பெண்களும் பக்தியுடன் கோவிலில் சாமி தரிசனம் முடித்துக் கொண்டு வாணவேடிக்கைகளை பார்த்த வண்ணம் அங்கு இருந்த கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ,

  

சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரங்கராட்டினத்தை சுற்றிலும் அவ்வூர் பிள்ளைகள் ஆர்வமாக காத்திருந்தார்கள், ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்த குழந்தைகளும் மற்றவர்களைப் பார்த்து கையாட்டுவதும் டாட்டா காட்டுவதுமாக தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

  

அந்த மாலை மங்கிய நேரத்தில் திருவிழாவுக்காக பலதரப்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் ரங்கராட்டினம் சுற்றி முடித்த களிப்பில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள் அன்புவும் அவனின் முறைப்பெண்ணான ஆதினியும். ,

  

”மாமா மாமா நில்லு அன்பு மாமா நில்லு மாமா” என அழைத்தபடியே 5வயதான ஆதினி தனது பிஞ்சு குரலில் அவளை விட 3 வயது பெரியவனான அன்புவுடன் ஓடிபிடித்து விளையாட அவளிடம் தான் சிக்கிக் கொள்ளக்கூடாதென அங்கும் இங்கும் அலைகழித்தபடியே ஓடிக் கொண்டிருந்தான் அன்பு.

  

”எங்க என்ன வந்து பிடி வா இப்படி வா ஆதினி வா வா” என கை நீட்டி அழைக்க அவளும் அவனை விரட்ட அவளிடம் தப்பிக்க அப்படி ஓடி இப்படி ஓடி அவனது தந்தை செல்வனிடம் சென்று அகப்பட்டான் அன்பு,

  

”அன்பு என்னடா விளையாட்டு இது, இப்படியெல்லாம் நீ ஓடக்கூடாது” என சொல்லிக் கொண்டே தனது மகனை தூக்கிக் கொள்ள அதற்குள் அவ்விடம் வந்த ஆதினியோ ,

  

”மாமா மாமா நானு நானு” என கையை உயர்த்தி தன்னையும் தூக்கிக் கொள்ளுமாறு சொல்ல அதைக்கண்ட செல்வனுக்கு சிரிப்பாக இருந்தது, ,

  

அன்பு உடனே தந்தையிடம் இருந்து இறங்கிக் கொண்டான். அதில் செல்வனும் ஆசையாக தன்னிடம் வந்த ஆதினியை அன்பாக தூக்கி வைத்துக் கொண்டார்.

  

அந்நேரம் வாணவேடிக்கையில் பலதரப்பட்ட ராக்கெட்டுக்கள் வானத்தை நோக்கி வீசப்பட்டு அதில் இருந்து பல வண்ணங்களலால் ஆன மத்தாப்புக்கள் வானத்தில் மிளிர்ந்தது, அந்த கண்கொள்ளா காட்சியைக்கண்ட ஆதினிக்கு உற்சாகமாக இருந்தது, கைகளை தட்டி ஐஐஐஐ என ஆர்பரிக்க கூடவே அன்புவும் குதூகலமாக கைகளை தட்டினான். இருவரின் குழந்தைத்தனமான செயலைக் கண்ட செல்வனோ தான் ஏந்தியிருந்த ஆதினியை தரையில் இறக்கி விட்டு அன்புவிடம்,

  

”அன்பு, கூட்டம் அதிகமா இருக்கு, ஆதினியை பத்திரமா பார்த்துக்க, அவள் கையை நீ கெட்டியா பிடிச்சிக்க சரியா” என சொல்ல உடனே அன்புவும் ஆதினியின் ஒரு பக்க கையை தனது கையுடன் இறுக்கமாக பற்றிக் கொண்டான் ,

  

இரு பிள்ளைகளும் திருவிழாவிற்காக புத்தாடைகளை அணிந்திருந்தார்கள், அவ்வூரிலேயே சற்று பணக்கார விவசாய குடும்பம் என்பதால் செல்வனை போலவே அவனது மகன் அன்புவும் அவனது உருவத்திற்கு ஏற்ப பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்திருந்தான், இதில் பட்டு துண்டு வேறு அது அவனது தோளில் வைத்தாலும் அடிக்கடி சரிந்து விழுவதால் அதை கழுத்தை சுற்றி அணிந்துக் கொண்டிருந்தான்.  அவனது தாயோ அவனுக்காக பார்த்து பார்த்து தங்கத்தாலான செயின், மோதிரம், பிரேஸ்லெட் என ,