என்ன பெரிய அவமானம்?! - சசிரேகா : Enna periya avamanam - Sasirekha
 

என்ன பெரிய அவமானம்?! - சசிரேகா

புதிதாக நான் எழுதிய இந்த சிறுகதையின் தலைப்பு "என்ன பெரிய அவமானம்?!" என்பதாகும். இந்த கதையை வாசிக்க உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
 

என்ன பெரிய அவமானம் - சசிரேகா

  

”கங்கா வாழ்த்துக்கள் உங்களுக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு” என உயர் அதிகாரி சொல்ல அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ,

  

”தாங்க்யூ சார்” என்றாள்,

  

”உங்க பழைய வேலைகளை சீக்கிரமா முடிச்சிட்டு புதிய பதவிக்கான வேலைகளை செய்ய ஆரம்பிங்க”,

  

”அதுக்கென்ன சார் இன்னிக்கே பழைய வேலைகளை முடிச்சிடறேன், நாளையில இருந்து புது வேலைகளை பார்க்கிறேன் சார்” என சொல்ல அவரும் சரியென சொன்னதும் சந்தோஷமாக அந்த அதிகாரியின் அறையை விட்டு வெளியேறி வந்தாள்.

  

அவளைக் கண்டதும் அவளுடன் பணி புரிபவர்களில் பெண்களுக்கு பொறாமையும் வயித்தெரிச்சலுமாக இருந்தது,  சில பெண்கள் மட்டும் சிரிப்புடன் வாழ்த்துக்கள் கூறினார்கள், ஆண்களில் சிலரோ கங்காவை அல்ப்பமாக பார்த்தார்கள், சிலர் ஏளனமாக சிரித்தார்கள், சிலருக்கு கோபம் பொறாமை வேறு, சிலர் மட்டும் சொல்ல வேண்டுமே என்பதற்காக வாழ்த்துக்கள் என சலிப்பாக சொல்லிச் சென்றார்கள்.

  

இத்தனைக்கும் அந்த பதவி உயர்வு கிடைக்க அவள் நிறைய பாடுபட்டிருக்கிறாள், நேர்மையாகவும் நியாயமாகவும் வேலை செய்திருக்கிறாள், அவளுக்கு இந்த உயர்வு கிடைத்தது முழுக்க முழுக்க அவளின் திறமையால்தான் ஆனால் அதை யார் நினைத்துப் பார்த்தார்கள். ,

  

மதிய உணவு இடைவேளையின் போது கங்கா பழைய வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள், அதைக்கண்ட சில ஆண்கள்,

  

”இவளுக்கு எப்படி ப்ரமோஷன் வந்துச்சின்னு தெரியாதா என்ன, எல்லாம் அப்படித்தான்” என அழுத்தமாகச் சொல்ல அந்த வார்த்தைகள் கொச்சையாக காதில் விழுந்தது ,

  

அதைக்கேட்டு கங்காவிற்கு மனது பாரமானது, சட்டென பேசியவனிடம் சென்று என்னடா என கேட்டுவிடலாம், இத்தனைக்கும் தனது கடுமையான உழைப்பை அனைவரும் பார்த்திருந்தனர், ஆனால் என்ன பிரயோசனம், இப்போது அவனை கேள்வி கேட்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை, தனக்கு என ஒரு நாள் வரும் என காத்திருந்தாள். ,

  

ஆண்கள்தான் இப்படியென்றாள் பெண்களில் சிலர் பொறாமையுடன்,

  

”எப்படித்தான் இப்படியிருக்காங்களோ, நம்மால எல்லாம் இவங்களை போல இருக்க முடியாதுப்பா” என நாகூசாமல் பேசி வைக்க கங்கா நொறுங்கிப் போனாள், ஆண்தான் அப்படியென்றாள் பெண்ணுமா இன்னொரு பெண்ணை இவ்வாறு இளப்பமாக நினைக்க வேண்டும் ,

  

உன்னால் முடிந்தால் கஷ்டப்பட்டு வேலை செய்து உன் திறமையை நிரூபித்தால் உனக்கும் உயர்வு பாராட்டு கிடைத்திருக்குமே, நீ எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு மற்றவர்களை குறை கூறினால் எப்படி என நினைத்த கங்காவோ வழக்கம் போல தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்தாள்.

  

ஆபிசிஸில்தான் இப்படி என்று வீட்டிற்கு வந்தவள் தன் கணவன் மற்றும் மாமனார் மாமியாரிடம் பதவி உயர்வு பற்றி சொல்ல அதற்கு அவர்களிடம் பெரிதாக மகிழ்ச்சியில்லை, குழப்பமும் சந்தேகமும் மிஞ்சியது,

  

”உனக்கா பர்மோஷனா அப்படி என்னத்த கிழிச்சன்னு உனக்கு தந்தாங்க, உன்னை விட சீனியர்ஸ் இருப்பாங்களே, அவங்களை விட்டுட்டு உனக்கு ஏன் தந்தாங்க, ஆமா உன் உயர் அதிகாரிக்கு என்ன வயசு, கல்யாணம் ஆனவரா ஆகாதவரா” என கேள்விகளால் அவளை துளைத்து எடுத்தார்கள், அவளால் எதற்கும் பதில் சொல்ல இயலவில்லை, இவர்களை காண்கையில் ஆபிசே பரவாயில்லை என நினைத்தவள் வீட்டாரிடம் தன் சொந்த திறமையால் வந்த உயர்வு என சொல்ல அதை ஒருவரும் ஏற்கவில்லை மாறாக,

  

”ப்ரமோஷன் வந்துடுச்சின்னு தலைமேல ஏறி ஆடாத புரியுதா” என அப்போதும் அவளை