சீரியலும் கார்ட்டூனும் - சசிரேகா
புதிதாக நான் எழுதிய இந்த சிறுகதையின் தலைப்பு "சீரியலும் கார்ட்டூனும்" என்பதாகும். இந்த கதையை வாசிக்க உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
சீரியலும் கார்ட்டூனும் - சசிரேகா
தனியார் பள்ளியில்,
”உங்க பொண்ணுக்கு இப்ப என்ன வயசாகுது” என டீச்சர் தன் எதிரே இருந்த பெண்மணியிடம் கேட்க அவரோ,
”என்ன இப்படி கேட்கறீங்க அவளுக்கு இப்ப 10 வயசு ஆகுது டீச்சர்” என்றார் கவிதா,
”10 வயசு பொண்ணு கேட்கற கேள்வியா உங்க பொண்ணு கேட்கறா”,
”அப்படி பூஜா என்ன கேட்டா டீச்சர் பாடம் சம்பந்தப்பட்டதா இல்லை ஜிகேலயா டீச்சர்”,
”ஓஹோ இன்னும் உங்களுக்கு நான் சொல்றது புரியலைன்னு நினைக்கறேன், இது ரெண்டுல இருந்து அவள் கேள்வி கேட்டிருந்தா கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேனே, உங்களை இப்படி பேரன்ட்ஸ் மீட்டிங்ல வரவழைச்சி பேசியிருக்க வேண்டிய அவசியம் இருக்காதே”,
”அப்படின்னா என்ன சொல்ல வர்றீங்க, அவள் தப்பா ஏதாவது கேள்வி கேட்டாளா”,
”ஆமாம்”,
”என்ன கேள்வி” ,
”கர்ப்பம்னா என்ன கர்ப்பமானாதான் கல்யாணம் செய்துக்கனுமாமே அப்படின்னா என்னன்னு கேட்டா”,
”எது” என கவிதா அலற அதற்கு டீச்சரோ,
”இது வெறும் சேம்பிள்தான்”,
”என்ன சொல்றீங்க எனக்குப் புரியலையே”,
”பூஜாவை பத்தி அப்புறம் பேசலாம், முதல்ல உங்களை பத்தி சொல்லுங்க, கவிதா நீங்க என்ன செய்றீங்க”,
”நான் பேங்க்ல அக்கவுண்ட்டன்ட் வேலையில இருக்கேன்”,
”ஓகே உங்க ஹஸ்பெண்ட்”,
”அவர் தனியார் கம்பெனியில மேனேஜரா இருக்காரு”,
”சரி உங்க குடும்பம் என்ன கூட்டுக்குடும்பமா இல்லை தனிக்குடும்பமா”,
”கூட்டுக்குடும்பம்தான் டீச்சர்”,
”எத்தனை பேர் இருக்காங்க உங்க வீட்ல”,
”நான் என் ஹஸ்பெண்ட் என் பொண்ணு அப்புறம் என் அம்மா அப்பா”,
”ஏன் உங்க மாமியார் வீட்ல நீங்க இல்லையா”,
”அது அவங்க தனியா இருக்காங்க, நாங்க தனியா இருக்கோம், பூஜாவையும் வீட்டையும் பார்த்துக்கறதுக்கு என் அப்பா அம்மா எங்களோட இருக்காங்க”,
”ஓ ஏன் உங்கப்பா அம்மாவாலதான் வீட்டையும் பூஜாவையும் நல்லபடியா பார்த்துக்க முடியுமா, உங்களோட மாமியார் மாமனாரால முடியாதா”,
”அப்படியில்லை டீச்சர், நான் மாமியாரோட ஒண்ணா இருந்தப்ப, எங்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து அதனால சண்டையெல்லாம் நடந்திருக்கு”,