நீ என்னை காதலி - யாஷ்
கூச்ச சுபாவமுள்ள பணக்கார இளைஞன் ஆரவ்வை, அவன் யார் என்ற உண்மையை அறியாமல் காதலிக்கிறாள் காவ்யா.
ஆரவ் சொல்லும் ஒரே ஒரு பொய்யினால் இவர்களின் காதலுக்கு ஆபத்து ஏற்படக் கூடுமா?
Chillzee Reviews
Check out the Nee ennai kadhali novel reviews from our readers.
01
“ஹாய்!”
திரும்பி ஆரவைப் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.
பதில் சொல்லாமல் முகத்தில் அடித்ததுப் போல அவள் முகத்தை திருப்பிக் கொண்டது ஆரவை பாதித்தது. அது போதாதென்று, “மூஞ்சியைப் பாரு. குட்டிக் கத்திரிக்கா மாதிரி இருந்துட்டு ஹாய் சொல்ல வந்துட்டான்.” என்று அவள் அருகே இருந்த பெண்ணிடம் சொன்னது வேறு அவனின் காதில் விழுந்து முகத்தை சுருக்க வைத்தது.
எனினும், அவள் சொல்வது உண்மை தானே என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டான் ஆரவ்.
அவன் உயரம் ஐந்தடி ஐந்து அங்குலம். சப்பி பேபி என அழைக்கும் விதமான உடல் வாகு வேறு. அப்புறம் அவள் வேறு என்ன சொல்வாள்.
ஆரவ் மனம் தெளிவாகி விட, பார்ட்டியில் வழங்கப் பட்டுக் கொண்டிருந்த ஜூஸ் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.
“ஆரவ்!” ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டான் குமரன்.
“குமார், எப்படிடா இருக்க?”
“நல்லா இருக்கேன் ஆரவ். சாரி டா வேலை அதிகம். உன்னை உடனே வந்து மீட் செய்ய முடியலை.“
“பரவாயில்லை குமார். கமிட்மெண்ட்ஸ் தான் முக்கியம். உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.”
“ஹாய், ஹலோ!” என அவர்களின் பேச்சில் குறுக்கிட்டது ஒரு பெண் குரல்.
ஆரவ், குமரன் இருவரும் குரல் வந்த பக்கம் திரும்பினார்கள். அங்கே சில நிமிடங்களுக்கு முன் ஆரவ் ஹாய் சொன்ன அதே பெண் இருந்தாள்.
“நீங்க ஆரவா?” என்ற அவளின் கேள்வியில் அதீத ஆவல் இருந்தது.
“ஆமாம், இவன் தான் ஆரவ்.” என நண்பனுக்காக பதில் சொன்னான் குமரன்.
“இன்டஸ்ட்ரியலிஸ்ட் அருள்ராஜ் மகன் ஆரவ்???”
“அதே ஆரவ் தான்” என்று இப்போதும் ஆரவிற்காக பதில் சொன்னான் குமரன்.
“ஹாய் ஆரவ். நாம இதுவரைக்கும் மீட் செய்தது கிடையாது. நான் யாழினி. எங்கப்பாவும் உங்க அப்பாவும் குட் பிரென்ட்ஸ்.”
ஆரவ் பெயருக்கு புன்னகை மட்டும் செய்தான், பதில் ஒன்றும் சொல்லவில்லை.
“உங்க கூட பேசனும் ஆரவ். உங்க அப்பா உங்களை பத்தி நிறைய சொன்னார். அப்போ இருந்தே பேசனும்னு ஆர்வத்தோட இருக்கேன்.”
“இவன் என் பிரென்ட். நாங்க ரொம்ப வருஷம் கழிச்சு இப்போ திரும்ப மீட் செய்திருக்கோம். எங்களுக்குள்ளே பேச நிறைய விஷயம் இருக்கு. யூ னோ, கேட்ச் அப்!” என அதே போலி புன்னகையுடன் சொல்லி அவளின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஆரவ்.
யாழினியின் முகம் சிறுத்தாலும், உடனேயே சமாளித்துக் கொண்டு பெரிதாக