பார்த்தேன் ரசித்தேன்... - பிந்து வினோத்
நான் முன்பு விளையாடிய ஒரு வுமன்ஸ் கிரிக்கெட் லீக் அனுபவத்தை வைத்து எழுதிய ‘கற்பனை’ காதல் கதையில் சில பல மாற்றங்களுடன் வந்திருக்கிறது இந்த இரண்டாம் பதிப்பு.
இது ஒரு ஜாலி கோ ரவுன்ட் கதை :-) ஸ்வரூப் & மதுவின் காதல் கதையை சொல்லும் கதை!
ரொம்ப லாஜிக் எல்லாம் எதிர்பார்க்காதீங்க... :-) ஒரு ஸ்வீட் லவ் ஸ்டோரின்னு நினைச்சுப் படிங்க :-)
Prologue. பார்த்தேன் ரசித்தேன்...
ஜான்சி ராணி க்ளப் (JRC) ஜெயிக்க இரண்டு பால்களில் ஏழு ரன்கள் எடுக்க வேண்டும்....
விளையாடிக் கொண்டிருப்பது அந்த அணியின் தலைவி அமிதா....
வேலு நாச்சியார் க்ளப் (VNC) அணியினர் ஃபீல்டில் உத்வேகத்துடன் இருக்கிறார்கள்.
இதோ பந்து.... வாவ் அமிதா அதை அழகாக ஆடி 4 அடித்து விட்டார்....
JRC அணி ரசிகைகளின் கரகோஷம் காதை பிளக்கிறது....
ஒரு பால்.... வெற்றி பெற மூன்று ரன்கள் வேண்டும்....
இன்னும் ஒரு 4 அடித்து ஹீரோயின் ஆவாரா அமிதா????
இதோ கடைசி பந்து.... ஆக்ரோஷத்துடன் அடிக்கிறார் அமிதா....
ஓ...! பாலை கோட்டை விட்டு விட்டார்.... அமிதாவின் காலுக்கும் பேட்டுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் சென்ற பால் ஸ்டம்பை அடித்து தாக்கி விட்டது...
அமிதா க்ளீன் போல்ட்....
VNC அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...
அமிதா நடந்ததை நம்ப முடியாமல் நிற்க, அவளின் அணியின் ஓனர் லக்ஷ்மி பற்களை கடித்துக் கொண்டு தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தாள்....
இந்த வருடமும் அந்த ஜெயாவின் அணியிடம் தோல்வியா??? ச்சே....!
01. பார்த்தேன் ரசித்தேன்...
“ஐயோ ஸ்வரூ, இவளுங்க இம்சை தாங்க முடியலைடா...”
போனின் மறுபக்கம் ஒலித்த வினீத்தின் புலம்பலை கேட்டு புன்னகைத்தப் படி,
"கமான் மச்சி, பொண்ணுங்களை பார்த்து இப்படி பயப்படுற....” என்றான் ஸ்வரூப்...!
“நீ அங்கே இருந்து ஈசியா சொல்வ, இங்கே வந்து பாரு அப்போ தான் உனக்கு தெரியும்.... தலைமுறை தலைமுறையா நம்ம குடும்பத்துல மதுரை ஆட்சியான பொம்பளைங்க ஆட்சி தான் நடக்குது.... ஒரே ஒரு தடவையாவது ஆம்பளைங்க டாமினேஷன் வந்து சிதம்பர ஆட்சி வருமான்னு பார்க்குறேன்.... ஹுஹும்.... நடக்கவே மாட்டேங்குது! அபிஷேக் மேல நிறைய நம்பிக்கை வச்சிருந்தேன்.... அவன் நம்ம அப்பாவை எல்லாம் விட ரொம்ப மோசமா இருக்கான்....”
போனில் புலம்பல் நிற்காமல் தொடர்ந்தது...
“அபி அப்படி என்ன செய்றான் வினீத்???”
“வந்து பார்த்து தெரிஞ்சுக்கோ.... அவன் வைஃப் சரோக்கு சாமரம் வீச தான் சாருக்கு இப்போலாம் டைம் இருக்கு.... சூப்பர் பிஸி....”
“அபியா அப்படி???”
“ஆமாம்...!!!! இவளுங்களை அடக்க யாராவது புதுசா வந்தா தான் உண்டு....”
“நீ கவலைப் படாதே மச்சான்... நான் ஆன் தி வே... பொண்ணுங்க டாமினேஷனை நான் உடைச்சுக் காட்டுறேன்....”