Chillzee KiMo Books - நீயின்றி நான் ஏதடி - சசிரேகா : Neeyindri naan yethadi - Sasirekha

நீயின்றி நான் ஏதடி - சசிரேகா : Neeyindri naan yethadi - Sasirekha
 

நீயின்றி நான் ஏதடி - சசிரேகா

சசிரேகாவின் புதிய குறுநாவல்.
 

நீயின்றி நான் ஏதடி – சசிரேகா.

  

பாண்டிச்சேரி.

  

”வினய் என்னடா உனக்கு பிரச்சனை ஏன் இப்படியிருக்க” என ராம் கேட்க அதற்கு வினயோ,

  

”என்னை என்னதான் செய்யச் சொல்ற இரண்டாவது பிரச்சனை வர்றவரைக்கும் முதல் பிரச்சனை பூதாகரமா பெரிசா இருக்கு ஆனா இப்ப இந்த இரண்டாவது பிரச்சனை வந்ததும் முதல் பிரச்சனை கூட எனக்கு அவ்ளோ பெரிசா தெரியலை, அதை கூட சால்வ் பண்ணிடலாம்னு தோணுது”,

  

”முதல்ல உன்னோட முதல் பிரச்சனை என்ன அதைச் சொல்லு”,

  

”வேற என்ன எல்லாம் ஹரிணி பத்திதான்”,

  

”அவளுக்கென்னடா நல்லாதானே இருக்கா”,

  

”அப்படித்தான் நானும் நேத்து வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன் ஆனா இப்ப” என கவலையாக இருந்தவனின் தோளை தட்டிக் கொடுத்த ராமோ,

  

”சரி இப்ப இரண்டாவது பிரச்சனை என்னன்னு சொல்லு”,

  

”அவள் பேச மாட்டேங்கறா”,

  

”புரியலை”,

  

“நான் சொல்றது உனக்குப் புரியுதா இல்லையா அவளுக்கு இப்ப 3 வயசு ஆகுது ஆனா, அவளால பேச முடியலை”,

  

”என்னடா சொல்ற இதுவரைக்கும் அவள் ஒரு வார்த்தை கூட பேசினதில்லையா”,

  

”அப்படித்தான் சொல்றாங்க”,

  

”யார் சொல்றாங்க”,

  

”அவளை பார்த்துக்கற கேர்டேக்கர் சொன்னாங்க”,

  

”முட்டாள் அவங்க சொல்றது அப்புறம் நீ அவளை பார்த்துக்கலையா அவள்கிட்ட நீ ஒருதடவை கூட பேசலையா”,

  

”நான் எப்படிடா, அவளைப் பார்க்கறப்ப எல்லாம் எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு, அவளை என்னால பார்க்கவே முடியலை இதுல எங்க அவள்கிட்ட நான் பேசறது”,

  

”அய்யோ சே ஏன்டா இப்படி அவள் சின்ன குழந்தைடா”,

  

”எனக்குத் தெரியுது ஆனா, அவளை பார்க்கறப்ப நான் செஞ்ச தப்புதான்டா கண்ணு முன்னாடி வந்து நிக்குது”,

  

”எதைச் சொல்ற அந்த ஆக்சிடெண்ட் பத்தியா”,

  

”ஆமாம் ரோஷினி சொல்லிக்கிட்டே இருந்தா எனக்கு பயமாயிருக்கு, ரோஷினி வரலைன்னு நான்தான் கேட்காம அவளை சர்ப்பிங் கூட்டிட்டுப் போனேன், என்னோட முட்டாள்தனம் என் கைபிடியிலதான் அவள் இருக்கறதா நினைச்சேன் ஆனா, பெரிய அலை வந்து எங்களை புரட்டி போட்டிடுச்சி மூச்சி திணறி அவள் கடல்லயே இறந்துட்டா, கடைசியில அவளோட உடம்பைத்தான் என்னால காப்பாத்த முடிஞ்சது, அப்பவே சொன்னா வேணாம் வினய் நமக்கு ஒரு வயசுல பாப்பா இருக்காள்ன்னு கேட்டேனா நானு, அப்ப மட்டும் அவள் பேச்சை நான் கேட்டிருந்தா இப்ப ஹரிணிக்கு அம்மா இல்லாம போயிருக்குமா, எல்லாம் என்னாலதான் நான்தான் அவளோட அம்மாவை கொன்னேன், நான் ஒரு கொலைகாரன் ராம்”,