போகி வந்தாச்சா - சசிரேகா
சசிரேகாவின் புதிய குறுநாவல்.
சிறுகதை - போகி வந்தாச்சா - சசிரேகா,
“அதுக்குள்ள போகி வந்தாச்சா” என அலறினார் ஜெகநாதன் மாத காலண்டரைப் பார்த்தபடி,
அவரின் அலறலைக் கேட்ட அவரின் மனைவி ஜானகியோ,
”அடடா போகி வந்துடுச்சா, இப்பதான் போன மாதிரியிருந்தது அதுக்குள்ள வந்துடுச்சா போச்சி” என சலித்துக் கொள்ள அதைக் கேட்ட அவர்களின் மகன் குமரனோ,
”இந்த போகி வந்தாலே வீட்ல பிரச்சனைதான் வரும்” என சொல்ல அதற்கு அவனின் மனைவி துர்காவோ,
”அதுக்காக இந்த போகியை கொண்டாடாம இருக்க முடியுமா என்ன, இந்த முறை யார் பிரச்சனையில மாட்டிக்கப் போறாங்களோ தெரியலையே” என புலம்ப அதைக்கேட்டப்படி வந்த அவர்களின் மகள் லாவண்யாவோ,
”போகி வந்தாச்சா, அப்ப யாரோட வண்டவாளமோ தண்டவாளத்தில ஏறப்போகுது டோய்” என குதூகலமாக கத்த அதைக்கேட்ட அவளின் தம்பி சதீஷ்,
”இந்த போகியை எவன்டா கண்டுபிடிச்சது, இது வந்தாலே எனக்குதான் நிறைய வேலை வரும்” என அலுத்துக் கொண்டான்.
போகி வந்ததும் அந்த வீட்டில் இருந்த அனைவருமே மகிழ்ச்சிக் கொள்ளாமல் ஏதோ தீர்வில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொண்டது போல நொந்துக் கொண்டார்கள்.
”நாளை மறுநாள் போகி, இன்னிக்கே வேலையை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்” என ஜெகநாதன் சொல்ல அதற்கு ஜானகியும் தன் பேத்தி மற்றும் பேரனைப் பார்த்து,
”லாவண்யா சதீசு, தாத்தா சொன்னது கேட்டிச்சில்ல, போன முறை மாதிரி சண்டை வராம நடந்துக்கனும் புரியுதா”,
”பாட்டி என் பேரு சதீஷ் உனக்கு ஷ் வராதா“ என சதீஷ் சொல்ல அதற்கு ஜானகியோ,
”எனக்கு நீ பாடம் எடுக்காத, முதல்ல உன் ரூமை சுத்தம் செய் போ, தேவையில்லாத எல்லாத்தையும் கொண்டாந்து ஹால்ல பரப்பி வை” என சொல்லியவர் தன் மருமகள் துர்காவிடம்,
”துர்கா வீட்டையே சுத்தம் செய்யனும், பொங்கல் வருது, அதுக்கு வெள்ளை அடிக்கனும், அப்பப்பா ஏகப்பட்ட வேலைகள் இருக்கே, சாமான்களை முதல்ல ஒதுக்கி வை” என சொல்ல துர்காவும் சரியென தலையாட்ட ஜானகி தன் மகன் குமரனிடம்,
”குமரா வெள்ளை அடிக்கறவன்கிட்ட பேசிட்டியா”,
”இனிமேலதான்மா பேசனும்“,
”நேரம் இல்லைடா இன்னிக்கே வீட்டை சுத்தம் செய்திடலாம், தேவையில்லாத பொருளை எடுத்து வைச்சி போகி நெருப்பில போட்டு கொழுத்திடலாம், நாளைக்கே வெள்ளை அடிச்சாதான் சரியா வரும்”,
”சரிம்மா நான் போய் வெள்ளை அடிக்கறவன்கிட்ட பேசிட்டு வரேன்” என சொல்லிவிட்டு தன் மனைவியைப் பார்த்து,
”நம்ம ரூம்ல எது தேவை, எது தேவையில்லாத பொருள்ன்னு பார்த்து எடுக்கறதுக்கு நேரமாகும், துணிமணி அலமாரி, பீரோ தவிர மீதி எல்லாத்தையும் கொண்டாந்து ஹால்ல பரப்பி வைச்சிடு, நான் வந்து என்ன ஏதுன்னு பார்க்கிறேன், ஏதாவது முக்கியமான பொருள் இருந்து அதை நாம கவனிக்காம போயிட்டா பிரச்சனைதான், போன முறை சரியா கவனிக்காம பழைய டைரியில இருந்த 2000 ரூபாயை போகி நெருப்பில போட்டோமே, அதை இன்னும் நீ மறக்கமாட்டன்னு நினைக்கிறேன்” என்றான் குமரன்,
”அதை ஏன் இப்ப ஞாபகப்படுத்தினீங்க, வயித்தெரிச்சலா போச்சி, 2000 ரூபாய் எந்த நினைப்பில,