விதியினும் காதல் வலியது - சசிரேகா
முன்னுரை
விதிக்கும் காதலுக்கும் நடுவில் நடக்கும் போட்டியே இக்கதையின் கருவாகும் .
சுனாமியில் அனைத்தையும் இழந்த மூவரின் வாழ்வில் நடக்கும் கதையிது .
இது ஒரு முக்கோணக்காதல் கதையாகும் .
இதில் இருவர் ஒருத்தியை விரும்புகிறார்கள் அதில் யாரது காதல் வெற்றியடையும்?.
விதி யாரை சேர்க்கும்?.
அப்படி விதியே உண்மையான காதலை பிரிக்க நேரும் போது என்னாகும்?.
அந்த காதல் விதியை விட வலிமையாகுமா?.
உண்மையான காதலர்களை விதியிடமிருந்து காப்பாற்றி இணைக்குமா?.
விதியானது காதலர்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தியது அந்த கஷ்டத்தை எப்படி காதல் சரிகட்டியது என்பதை சொல்லும் அழகான காதல் கதையே இதுவாகும். நன்றி.
விதியினும் காதல் வலியது-சசிரேகா.
முன்னுரை.

அன்பான வாசகர்களுக்கு.
ஒரு சின்ன வேண்டுகோள் இக்கதை 2004 ஆம் ஆண்டு நடந்த சுனாமி பேரழிவினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து 2004ஆம் வருடத்தில் இருந்து தொடர்ந்து என்ன நடந்திருக்கும் என்பதையே கதையாக எழுதியுள்ளேன் அதுபடி இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆனாலும் இப்போது நடைமுறையில் வருடத்தை வைத்து அவர்களின் வயதை கணக்கிடாதீர்கள் தற்காலிக வருடத்தை விடுத்து கதையை அதன்போக்கில் படித்துப் பாருங்கள் நன்றி.
பாகம் 1.
வருடம் - 2004.
சென்னையில் சுனாமி வந்த மறுநாள்….
சென்னை மெரினா கடற்கரையோரம்….
சுனாமி பேரலைகள் கடற்கரையோரம் குடும்பமாக குடிசை பகுதிகளில் வாழ்ந்துக் கொண்டிருந்த மீனவ மக்களை தன்னுள் வாரி சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டது, அவ்வாறு கொண்டு சென்ற மீனவ குடும்பத்தைச் சேர்ந்த நந்தனும் ஒருவன், 10 வயது நிரம்பியவன் முதல் நாள் சுனாமியின் கோர தாண்டவத்தில் இருந்து தப்பித்து தன் தாய் தந்தையை இழந்து பரிதாபமான நிலையில் கடலையே பார்த்த வண்ணம் அழுதுக் கொண்டு இருந்தான். .
அவன் பக்கத்தில் அவனது பால்ய நண்பன் ரகுவரன், அவனுக்கும் அதே வயதுதான் அவனும் மீனவ குடும்பத்தைச் சார்ந்தவன்தான், ரகுவின் பெற்றோரையும் சுனாமி அலைகள் கொண்டு சென்று விட்டது.
இந்த இருவருமே பிறந்ததில் இருந்து இன்று வரை ஒன்றாக நண்பர்களாக வளர்ந்து வந்ததால் இப்போதும் துக்க நிகழ்விலும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இணைந்து அமர்ந்திருந்தார்கள் ரகுவிற்கு கோபம், கடலையே வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான், தனது குடும்பத்தையே எடுத்துக் கொண்டதே இதற்கா கடல்தாய் கடலம்மா என பெயர் சூட்டி அன்போடு அழைத்தார்கள், .