Chillzee KiMo Books - தும்பை போலே தூய அழகே - சசிரேகா : Thumbai pole thooya azhage - Sasirekha

தும்பை போலே தூய அழகே - சசிரேகா : Thumbai pole thooya azhage - Sasirekha
 

தும்பை போலே தூய அழகே - சசிரேகா

புதிய புத்தாண்டு சிறப்பு குறுநாவல்.
 

தும்பை போலே தூய அழகே - சசிரேகா.

  

ஆஸ்பிட்டலில் நர்ஸாக வேலை பார்த்துக் கொண்டிருந்த தேவியிடம் ஆஸ்பிட்டல் டீன் வந்தார்.

  

”தேவி” என அன்பாக அழைக்க அவளும் மரியாதையாக.

  

”சொல்லுங்க டாக்டர்”.

  

”என்னம்மா முடிவு எடுத்திருக்க“.

  

”டாக்டர் அது வந்து”.

  

”பரவாயில்லை சொல்லும்மா, இதுல ரிஸ்க் இருக்குன்னு நினைக்கிறியா”.

  

”அப்படியில்லை டாக்டர் ஆனா என் வீட்ல அப்பா அம்மா இந்த விசயத்துக்கு ஒத்துக்கலை, அதான் பார்க்கிறேன்” என்றாள் தயக்கத்துடன்.

  

”அப்படியா சரி சரி, நீயிருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன், பலருக்கு நீ வழிகாட்டியா இருப்பன்னு தோணிச்சி, சரிம்மா பரவாயில்லை உன் வேலையைப் பாரு”.

  

”டாக்டர் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க நான் வேணா இன்னொரு முறை என் வீட்ல பேசிப் பார்க்கிறேனே”.

  

”சரி ஆனா 2 நாள் டைம் அதுக்குள்ள உன் முடிவை சொல்லிடு போதும்“.

  

”எஸ் டாக்டர்” என சொல்ல அவரும் அங்கிருந்து சென்றார். .

  

அவர் சென்றதும் தேவியின் முகம் கலவரமாகியது. குழப்பத்துடனே வேலைகளை செய்து முடித்துவிட்டு வீடு திரும்பியவள் தன் தாய் தந்தையிடம் மெதுவாகப் பேசினாள்.

  

”அப்பா இன்னிக்கு கூட டீன் வந்து பேசினார்ப்பா”.

  

”தேவி நாங்க ஏற்கனவே எங்க முடிவை சொல்லிட்டோம்“ என்றார் காட்டமாக.

  

”அப்பா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க இதுல ரிஸ்க் எதுவும் இல்லைப்பா”.

  

”நாட்டு நடப்பு தெரிஞ்சித்தான் பேசறியாம்மா, அந்த டீன்க்கு மதிப்பு மரியாதை புகழ் வேணும்ங்கறதுக்காக எதையாவது செய்வாரு, அதுக்கு நீ துணையா இருக்கனுமா ஏன் நீ மட்டும்தான் அங்க வேலை செய்றியா மத்தவங்க யாரும் இல்லையா என்ன”.

  

”இருக்காங்க ஆனா அவங்களுக்கு புருஷன் குழந்தைகள்ன்னு குடும்பம் இருக்கு”.

  

”ஏன் உனக்கும் அப்பா அம்மா நாங்க இருக்கோம்ல“.

  

”ஆனா அப்பா“.

  

”முதல்ல உனக்கு கல்யாணம் செய்து வைக்கனும்”.

  

”இப்ப என்னப்பா அவசரம்”.

  

”அவசரம்தான் விட்டா நீ அந்த டீன் பேச்சைக் கேட்டு நடப்ப வேணாம் வேணாம்” என சொல்லிவிட தேவி சோர்ந்துப் போனாள்..

  

இதில் டீன் புதிதாக கட்டும் கட்டிடத்தைக் கடந்துதான் அவள் ஆஸ்பிட்டலுக்கு செல்ல வேண்டும், ஒவ்வொரு முறை அதை பார்க்கும் போதெல்லாம் ஒரு வித ஏக்கம் பிறக்கும், அதை பார்த்தபடியே ஆஸ்பிட்டலுக்குச் சென்று தனது வேலையை தொடர்ந்தாள். .