காதலின் காத்திருப்பு - சசிரேகா : Kadhalin kathiruppu - Sasirekha
 

காதலின் காத்திருப்பு - சசிரேகா

8 சிறுகதைகளின் தொகுப்பு!
 

காதலின் காத்திருப்பு.

  

கல்லூரி வளாகத்தில் வகுப்பறையில் லன்ச் பிரேக் சமயத்தில் கார்த்திக் இருந்த இடத்திற்கு வந்த ஆதிரா அவன் பக்கத்தில் அமர்ந்து அவனிடம் அன்பாக பேசலானாள். ஆனால் கார்த்திக் பல நாட்களாக ஆதிராவை ஒருதலையாக காதல் செய்வது யாருக்கும் தெரியாது. அவளை காதலிப்பதற்காகவே இந்த கல்லூரிக்கு படிக்க வந்தான் கார்த்திக்.... இப்போது ஆதிரா அன்பாக பேசவும் மனம் மகிழ்ந்தான்.

  

”ஹாய் கார்த்திக் என் பேரு ஆதிரா நான் உன்னை ரொம்ப நாளா கவனிக்கிறேன் நீ ஏன் யார்கிட்டயும்            பேச மாட்டேங்கற பழகமாட்டேங்கற என்னை உன் ப்ரண்டா ஏத்துக்கறியா ப்ளீஸ் கார்த்திக்” என அழகாக பேசிவைக்க கார்த்திக் ஆதிரா சொன்னதைக் கேட்டு மனம் கலங்கினான். தனக்குள்.

  

”ஆனா ஆதிரா நான் உன்னை லவ் பண்றேனே உன்னை ப்ரண்டா எப்படி  நான் நினைப்பேன் எப்படி உன்கிட்ட என் காதலை சொல்றதுன்னு தெரியலையே?!” என சொல்லிக் கொண்டு ஏதும் பேசாமல் அமைதி காத்தான். அவனின் அமைதியைக்கண்டு புரிந்துக் கொள்ள இயலாமல் குழம்பினாள் ஆதிரா. கார்த்திக் மனதில் இருப்பதை அறியாத ஆதிராவும் அவனிடம் வெகுளியாக பேசினாள்.

  

”கார்த்திக் என்னாச்சி என்ன யோசிக்கற? ஏன் அமைதியா இருக்க என்னோட பிராண்டா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா” என கேட்க.

  

தன்னுடைய காதலை மறைத்து ஆதிராவை விட்டுவிட மனமில்லாமல் அவளுடைய நட்பை ஏற்றான் கார்த்திக்.

  

”இல்லை நான் எதையும் யோசிக்கலை நீ திடீர்ன்னு வந்து கேட்கவும் நான் பதட்டமாயிட்டேன் சாரி நட்புதானே அதுக்கென்ன ஓகே இனிமே நாம ப்ரண்டா இருக்கலாம் ஆதிரா” என சொல்ல உடனே ஆதிராவும் மனம் மகிழ்ந்து.

  

”ஓகே அப்போ நாம இன்னியிலிருந்து நல்ல பிரண்ட்ஸ் ஓகேவா கார்த்திக் ரெண்டு பேரும் கை கொடுத்துக்கலாம்” என சொல்ல அவனும் அவளின் கையை பிடித்து உலுக்கியபடியே .

  

”இனிமே நாம பிரண்ட்ஸ்” என்றான் ஆனால் அதில் உயிர்ப்பில்லை அவனுக்குள் இருந்த காதலை நினைத்து வருந்தினான் ஏதோ அவளுடன் நட்பாவது கிடைத்ததே என்று எண்ணி மென்மையாக சிரித்தான். அவனின் சிரிப்பைக்கண்ட ஆதிராவும் சந்தோஷமடைந்து அன்று முதல்  கார்த்திக்கின் தோழியானாள்.

  

2 வருடங்கள் கழித்து கல்லூரி பேர்வெல்டே அன்று ஆதிரா வருத்தமுடன் கார்த்திக்கிடம் இருந்து விடைபெற எண்ணினாள்.

  

”கார்த்திக் நாம ப்ரண்ட்ஸ்களாகி இதோட 2 வருஷம் ஆயிடுச்சி நம்ம காலேஜ் படிப்பும் முடிஞ்சிடுச்சி இனி நாம நம்ம சொந்த ஊர்களுக்கு போகனும் இனிமே என்னால உன்னை மீட் பண்ண முடியாது. ஆட்டோகிராப்ல உன் கையெழுத்து வாங்க வந்தேன். என்கிட்ட கடைசியா நீ எதையாவது சொல்ல ஆசைப்படறியா கார்த்திக் அப்படி இருந்தா இப்பவே சொல்லிடு கார்த்திக் நான் கிளம்பனும்” என கேட்க கார்த்திக் தடுமாறினான். மனதுக்குள் இருந்த காதலை ஆதிராவிடம் சொல்ல நல்ல வாய்ப்பு வந்துள்ளது அதை இழக்க கூடாது என நினைத்தவன் உடனே தன் மனதில் அடக்கி வைத்திருந்த காதலை அவளிடம் வெளிப்படையாக பேசினான்.

  

”அது வந்து ஆதிரா, நான் எப்படி சொல்றது நான் உன்னை பார்த்த நாள்ல இருந்து எனக்கு உன்னை பிடிக்கும். நான் உன்கிட்ட என் காதலை சொல்றதுக்குள்ள நீ என்கிட்ட நட்பு பத்தி பேசவும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை உன்னை இழக்க விரும்பாம நான் சரின்னு சொன்னேன் ஆனா இப்ப கூட நான் உன்னை லவ் பண்றேன் ஆதிரா” என தயக்கத்துடனே சொல்லி முடித்தான். அதைக்கேட்ட ஆதிராவிற்கு தூக்கிவாரிப் போட்டது. சட்டென அவன் மீது கோபித்துக் கொண்டாள்.

  

”லவ்வா ஆனா கார்த்திக் நாம நட்பாதானே பழகினோம் இந்த லவ் எங்கிருந்து வந்திச்சி கார்த்திக் நமக்குள்ள. நான் உன்னை அந்த எண்ணத்தில பார்க்கவேயில்லையே ஆனா நீ என்னை நட்புங்கற பேர்ல லவ் பண்ணியிருக்க .