இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்
இது ஒரு சிம்பில் கதை :-)
லாவண்யா பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கியப் படி அந்த கல்லூரியின் நடைபாதையில் நடந்துக் கொண்டிருந்தாள்.
கல்லூரி வாழ்க்கை முடிந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன என நம்பவே அவளுக்கு கடினமாக இருந்தது.
அந்த நான்கு வருடத்தின் ஒவ்வொரு நாளும் இன்னமும் நினைவில் இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
அவர்களின் இ.சி.இ வகுப்பறைகள்... லேப்... கேன்டீன்... காலேஜ் பஸ்... ஒவ்வொன்றிலும் எத்தனை எத்தனையோ நினைவுகள்...
ஃபைனல் இயர் கடைசி எக்ஸாம் முடித்து விட்டு தோழிகள் மூவரும் பிரியும் முன் பேசியது நினைவில் வந்தது...
பிரிவின் வேதனை, அழுகைகள் கூடவே, எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற ஆசை... அதன் கூடவே எதிர்கால ஆசை...
“சீக்கிரமே கல்யாணம் செய்துக்க போறேன்... வாழ்க்கைல நல்லபடியா செட்டில் ஆகனும் அது தான் என் ஆசை... வெல் செட்டில்ட் ஆன ஒருத்தனா பார்த்து கல்யாணம் செய்துக்கிட்டா, நோ டென்ஷன்... வாழ்க்கை முழுசும், ஹாயாக இருக்கலாம்..”.
லாவண்யா சொன்னதை கேட்டு முறைத்த பாரதி,
“லூசாடி நீ... கல்யாணம் என்பது எல்லாம் நம்மளை கட்டி போடுற சங்கிலி மாதிரி. பணம் இருந்தாலும் சந்தோஷமா எல்லாம் இருக்க முடியாது... இம்சை பிடிச்ச விஷயம்....” என்றாள்.
“ஏன் நீ கல்யாணம் செய்துக்கவே போறதில்லையா???”.
“நோ, ஆம்பளைங்களை பார்த்தாலே எனக்கு பிடிக்காது! என் லைஃப்ல கல்யாணம்னு ஒன்னு கிடையவே கிடையாது...”.
“க்கும்... நீயும் உன்னோட ஃபெமினிஸ்ட் ஆட்டிட்யுடும்...! அவ இருக்கட்டும், நீ சொல்லு பவி....”.
பவித்ரா யோசித்தாள்....
“தெரியலைப்பா... என்ன நடக்குதோ அது தான் நடக்கும்...” என்றாள் அமைதியாக.
“என்ன ஆங்ரி வுமன் இவ்வளவு அமைதியா பதில் சொல்ற?”.
“தெரியாத விஷயத்தை பத்தி வேற எப்படி சொல்றது?”.
“நீ சொல்றீயோ இல்லையோ, எனக்கு ஒன்னு தெரியும், உன்னை கல்யாணம் செய்துக்குறவனுக்கு நல்ல டிபன்ஸ் ஸ்கில்ஸ் வேணும் இல்லைனா, ஆளு அதோ கதி தான்... திட்டி தீரத்துட மாட்ட...”.
“சரியா சொன்ன பாரதி.... பவியோட கோபத்துக்கு முன்னாடி சூரியனோட ஹீட் கூட கம்மி தான்... அவர் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்றவரா அமைதியானவரா இருந்தால் தான் சரியா இருக்கும்...”.
“என்னைப் பத்தி உங்க இரண்டு பேரை தவிர வேற யாருக்கு தெரியும்? நீங்க சொன்னால் சரியா தான் இருக்கும்...”.
பவித்ராவின் பேச்சைக் கேட்ட படி அங்கே வந்திருந்த, நண்பன் பட ‘சைலன்சர்’ போல எப்போதும் அவர்களின் க்ரூப்பை ‘கிராஷ்’ செய்யும் சுனிதா,
“ஹேய், என்னப்பா மூணு பேரும் ரொம்ப சீரியசா பேசிட்டு இருக்கீங்க?” என்றுக் கேட்டாள்.
“சும்மா சுனி... ஃப்யூச்சர், மேரேஜ்ன்னு பேசிட்டு இருந்தோம்....” என்றாள் லாவண்யா.
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Bindu Vinod
- Bindu
- Vinod
- Family
- shortRead
- Tamil
- Drama
- Books
- from_Chillzee
- Friends