Chillzee KiMo Books - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ - சசிரேகா : Pennalla pennalla oothapoo - Sasirekha

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ - சசிரேகா : Pennalla pennalla oothapoo - Sasirekha
 

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ - சசிரேகா

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ என்ற பாடலின் வரிகளை கொண்டு எழுதிய 20 சிறுகதைகளின் தொகுப்பு!
 

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ.

  

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ

  

அழகான அந்தி மாலை நேரம்.

  

”மாமா” என்றாள் ஏக்கமாக ரதி.

  

”சொல்லு” என்றான் மாதவன் கவலையாக.

  

”உன் அப்பா சொன்னதுக்காக ஊரை விட்டே போகனும்னு முடிவு பண்ணிட்டியா மாமா”.

  

”என்ன செய்றது வேலை வெட்டியில்லாம தண்டச்சோறு சாப்பிடறேன்னு சாப்பிடறப்பல்லாம் என்னை திட்டி கேவலப்படுத்தினா எப்படி என்னால தாங்க முடியலை ரதி அதான் போறேன்”.

  

“நீ எங்க போவ மாமா?”.

  

”சென்னைக்கு போறேன் ஏதாவது வேலையை தேடறேன்”.

  

“இந்த ஊர்லயே வேலையை தேடு மாமா, இந்த மதுரையில இல்லாத வேலையா”.

  

“நான் படிச்சது இன்ஜினியருக்கு சொந்த ஊர்ல சாதாரண வேலை பார்த்தா அவ்ளோதான் என் மானம் போச்சி, மரியாதை போச்சின்னு என் அப்பா ஆடுவாரு அதான் வெளியூர்னா நான் அங்க என்ன வேலை செஞ்சாலும் இங்க இருக்கறவங்களுக்கு தெரியாது ஏதோ கூலி வேலையாவது செய்யலாம்னு இருக்கேன்”.

  

“மாமா அப்படி சொல்லாத இன்ஜினியர் படிச்சா வேலை கிடைக்காதா என்ன”.

  

“இப்ப யாருக்கும் கிடைக்கலையேம்மா, எல்லாரும் படிச்சிட்டு வெட்டியாதான் இருக்காங்க”.

  

“என்னையும் என் அப்பா அந்த படிப்புதான் படிக்கச் சொல்றாரு மாமா”.

  

“அய்யோ வேணாம் அப்படி எதையும் செய்யாத நீ பொண்ணு, அழகா 2 டிகிரி படி அதுவும் டீச்சருக்கு படிச்சிடு டீச்சர் வேலையை பாரு இல்லையா அரசாங்க வேலைக்குத் தேவையான படிப்பு படி ஆபிசராயிடு. இந்த இன்ஜினியர் படிச்சி நான் இப்படி இருக்கறது போதும் நீயும் என்னை மாதிரி ஆகவேணாம் புரியுதா”.

  

“சரி மாமா இப்ப வெளியூர் போறேங்கறியே எங்க தங்குவ? என்ன சாப்பிடுவ? என்ன செய்வ கையில பணம் இருக்கா?” என கேட்க அவனோ தனது பர்சை திறந்துப் பார்த்தான் அதில் 100 ரூபாய் இருந்தது.

  

”இவ்ளோதான் இருக்கு”.

  

“இதை வெச்சி எப்படி மாமா போக முடியும்”.

  

“ப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டிருக்கேன் பணம் கடனா தரேன்னு சொன்னாங்க”.

  

“என்கிட்ட இருக்கு மாமா நான் தரவா”.

  

“வேணாம் ரதி என் கஷ்டம் நான் படறேன், நீ எதுக்கு இப்ப இதைச் செய்ற”.

  

“இல்லை மாமா யார்கிட்டயோ கடன் வாங்கறதுக்கு பதிலா என்கிட்ட இருக்கே இதை வைச்சிக்க மாமா, நான்தானே நான் உனக்கு உதவி செய்யக்கூடாதா” என அவள் பேச அவனுக்கு கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனாலும் அவளின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தைக் கண்டவன்.

  

”உன்கிட்ட நான் எப்படி பணம் வாங்கறது என்னால முடியாது”.

  

“ப்ளீஸ் மாமா அப்படி சொல்லாத மாமா, நான் படிக்க நீ எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப”.