Chillzee KiMo Books - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - ரேவதி முருகன் - Kalyanam than kattikittu odi polama?!?! - Revathy Murugan

 

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! -  ரேவதி முருகன் - Kalyanam than kattikittu odi polama?!?! - Revathy Murugan
 

இது ஒரு காதல் கதை.

 

Chillzee Reviews

Check out the Kalyanam thaan kattikkittu odi polama story reviews from our readers.

  

 

 

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?!

  

1

  

ஹாப்பி அனிவேர்சரி மாம், டாட்” ப்ரித்வியும் அவன் தங்கை சுசித்ராவும் பெரிய கேக் ஒன்றை மேஜை மேலே கொண்டு வந்து வைத்தார்கள்.

  

தங்களுக்கு நடுவே சீரியசாக பேசிக் கொண்டு இருந்த ஸ்ரீராமும், அனுராதாவும் பேச்சை நிறுத்தினார்கள்.

  

“மாம், உங்களுக்கு பிடிச்ச சாக்லேட் கேக். ஒரு வெட்டு வெட்டுங்க,” என சுசித்ரா எல்லோருக்கும் கேட்க அம்மாவிடம் ரகசியம் சொன்னாள். அப்படியே அப்பாவிடம்,

  

“சாரி டாட், இந்த தடவையும் நீங்க அட்ஜஸ்ட் செய்துக்க தான் வேணும்,” என்றாள்.

  

“எப்போவுமே உங்க அம்மாக்கு பிடிச்சதுக்கு தான் பிரையாரிட்டி கொடுக்கனும் சுச்சி கண்ணா. என் ஏ.ஆர் ஹாப்பியா இருந்தா நானும் ஹாப்பி,” என மகளிடம் சொல்லிக் கொண்டே, கேக்கின் ஓரமாக சிறிய துண்டு ஒன்றை வெட்டினார் ஸ்ரீராம். அதை அப்படியே கையில் எடுத்து அனுராதாவிற்கு ஊட்டியும் விட்டார்.

  

தடுக்காமல் அதை வாங்கிக் கொண்டாள் அனுராதா.

  

“கல்யாணமாகி 31 வருஷமாச்சுன்னு நம்பவே முடியலை ஏ.ஆர். இன்னும் அப்படியே இருக்க,” என ஸ்ரீராம் காதல் மன்னனாக வசனம் பேசவும், அனுராதா சிரித்தாள்.

  

“31 வருஷமாச்சு. இன்னும் உங்க ஜொள்ஸ் நிற்கலை. அச்சச்சோ என்ன லவ்வுடா சாமி இது?” என சுசித்ரா அப்பாவையே கிண்டல் செய்தாள்.

  

“என் ஏ.ஆர், நான் அப்படி தான் இருப்பேன். நீ சீக்கிரமா படிச்சு முடிச்சு கல்யாணம் செய்துட்டு எங்களுக்கு ப்ரைவசி கொடுக்குற வேலையை பாரு.”

  

“என்னங்க நீங்க!” என அனுராதா சொன்னதை டீலில் விட்டு விட்டு பெற்றவர்களின் நடுவே அமர்ந்து, குழந்தையாக அம்மாவின் கழுத்தை கட்டிக் கொண்டாள் சுசித்ரா.

  

“நான் இப்போ தான் ஃபர்ஸ்ட் இயர்ல இருக்கேன் டாட். நான் படிச்சு முடிச்சு கல்யாணம் செய்ய இன்னும் நிறைய டைம் இருக்கு. அதுக்கு முன்னாடி இந்த ப்ரித்விக்கு கல்யாணம் செய்து வச்சு என் ரூட்டை க்ளியர் செய்ங்க. உங்களுக்கும் வசதி, எனக்கும் வசதி.”

  

அனுராதா மௌனமாக நின்றிருந்த மகனின் கையை பற்றி தன் அருகே அமர்த்திக் கொண்டாள்.

  

“என்னடா ரித்து இன்னைக்கு சைலன்ட்டா இருக்க?”

  

“டாடும், சுச்சியும் வாயை மூடினா தான அம்மா நான் பேச முடியும். நாம பேச வாய்ப்பே கொடுக்காம அவங்க பேசிட்டே இருக்காங்க.”

  

“ஏய் நெட்டக் கொக்கு கொழுப்பாடா உனக்கு?” என சுசித்ரா சண்டை மோடுக்கு மாறினாள்.

  

“போடி, குள்ளக் கத்தரிக்கா,” என ப்ரித்வியும் அவளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான்.

  

“பாருங்க மாம் இந்த ப்ரித்வியை!” என சுசித்ரா புகார் கொடுக்க, அனுராதா ப்ரித்வியை கண்டிக்காமல் சுசித்ராவை கட்டி அணைத்துக் கொண்டாள்.

  

“நம்ம குடும்பம் எப்போவும் இப்படியே ஒன்னா, சந்தோஷமா இருக்கனும்!”

  

“அதெல்லாம் இந்த நெட்டக் கொக்கை கல்யாணம் செய்துக்கப் போற பொண்ணு கையில தான் இருக்கு மாம். சீக்கிரமா இவனுக்கு கல்யாணம் செய்ங்களேன். கை நிறைய சம்பாதிக்குற பேச்சலரா இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்கான். இது சரியே கிடையாது. இவனை கொடுமை படுத்தி அழ வைக்குற மாதிரி ஒருத்தியை கண்டுப்பிடிங்க.”