Chillzee KiMo Books - ஜனவரி டூ டிசம்பர் - சசிரேகா : January to December - Sasirekha

ஜனவரி டூ டிசம்பர் - சசிரேகா : January to December - Sasirekha
 

ஜனவரி டூ டிசம்பர் - சசிரேகா

ஜனவரி டூ டிசம்பர் வரையிலான பன்னிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பு!
 

ஜனவரி டூ டிசம்பர்

ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose)

  

தஞ்சாவூர்.

   .

காலையில் கண் விழித்த கார்த்திகேயன் என்கிற கார்த்திக் முகத்தை கைகளால் துடைத்துவிட்டு கண்கள் திறந்து பார்த்தான். அவனுக்கு நேராக இருந்த காலண்டரில் இன்று தேதி ஜனவரி ஒன்று என காட்டவே அதைப் பார்த்து சந்தோஷப்பட்டான்.

  

”ஜனவரி வந்தாச்சா இனிமேல ஜாலிதான் நிறைய லீவுகள் வரும் பொங்கலுக்கே 1 வாரம் லீவு தருவாங்க காலேஜ்ல, அப்புறம் மத்த நாளைக்கும் லீவு அதிகமாதான் வரும். எந்தெந்த நாள் லீவு வருதுன்னு ஒரு முறை பார்க்கனும்” என அவசரமாக எழுந்து ஓடி சுவரில் மாட்டியிருந்த காலண்டரைப் பார்த்தான்.

  

ஜனவரி மாதம் முழுக்க பார்த்தவன் நொந்தான்.

  

”இந்த முறை லீவு டேஸ்ல போய் பண்டிகைகள் வந்திருக்கே சே இப்படி வந்தா எப்படி ம் அப்ப காலேஜ்க்கு 20 நாள் கட்டாயம் போயே ஆகனுமா” என நொந்துக் கொண்டிருந்த நேரம் அவனது தாய் அழைத்தாள்.

  

”கார்த்திக் என்ன செய்ற நீ இன்னிக்கு தான் நியூ இயர், உன் பிரண்ட்ஸ் கூப்பிட்டாங்கன்னு எங்கயாவது வெளிய சுத்தின அடிவாங்குவ” என அவனது தாயார் திட்ட அதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் குளித்து ரெடியாகி டிபன் சாப்பிட்டவன் அப்படியே வீட்டு வாசல்படியில் நின்றுக் கொண்டு வெளியே வேடிக்கைப் பார்த்தான். அவன் வீட்டுக்கு முன்னாடி அவனது தாய் அழகாக ரோஜா செடிகளை வளர்த்து வந்தாள். பல நிறத்தில் ரோஜா பூக்கள் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும்.

  

கார்த்திக் பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை நிறைய ரோஜாக்கள் பூத்தது. அவன் காலேஜ்க்கு சென்ற 2 மாசத்திலிருந்து கார்த்திக்கே தினமும் ரோஜாக்களைக் கொண்டுச் சென்று தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் கொடுத்து நற்பெயர் வாங்கினான். அதனால் பல ரோஜாக்கள் அவனால் பறிக்கப்பட்டு தொட்டிகளில் வெறும் செடிதான் இருக்கும்.

  

ஆனால் கடந்த 3 வாரமாக கார்த்திக் ரோஜாக்களை பறிக்காமல் விட்டிருந்தான். அதனால் தொட்டிகளில் இருந்த ரோஜாக்களும் அழகாக பூத்து அவனைப் பார்த்து சிரித்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் வந்தார் அவனது தாய்.

  

”கார்த்திக் இங்க ஏன் நிக்கற உள்ள வா”.

  

“அம்மா வெளிய தானே ஊர் சுத்தக்கூடாது இங்க கூட நான் நிக்க கூடாதா”.

  

“சரி நில்லு ஆனா வெளிய நீ போக கூடாது”.

  

“சரிம்மா” என அலுத்துக் கொண்டே சொன்னான் கார்த்திக். அவன் சொன்னதை நம்பி வீட்டிற்குள் சென்றார் அவனது தாய்.

  

அவனது நண்பர்கள் சில நொடிகளில் அவனது தெருவிற்கு வந்து சைகை மூலம் கார்த்திக்கை அழைக்கவே அவன் வீட்டிற்குள் பார்த்தான், அவனது தாய் பிசியாக சமையல் வேலையில் இருக்கவே சிரித்துக் கொண்டே நைஸாக அங்கிருந்து கிளம்பினான் கார்த்திக்.

  

நண்பர்களுடன் உலாவிக் கொண்டே இருந்தவன் நேராக காலேஜ் க்ரவுண்டுக்குச் சென்றான். அங்கு நிறைய பேர் விளையாடிக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தார்கள். அதில் இவனும் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான்.

  

”கார்த்திக் நாளைக்கு காலேஜ் இருக்குடா 3 நாள் கூட லீவு கொடுத்தும் அதுக்குள்ள லீவு முடிஞ்சிடுச்சி வருத்தமா இருக்குடா” என அவனது நண்பன் கிஷோர் சொல்ல.